Перейти к содержимому

மேலக்கள்ளங்குளம் எத்தனால் ஆலை | STELLAR DISTILLERIES | நடப்பது என்ன? | முருகானந்தம் நேர்காணல்.

மக்களுக்கான அரக்கன்

0:00 / 0:00

மேலக்கள்ளங்குளம் எத்தனால் ஆலை | STELLAR DISTILLERIES | நடப்பது என்ன? | முருகானந்தம் நேர்காணல்.

1 107 просмотров · 10 дней назад
மக்களுக்கான அரக்கன்
217 подписчиков
1 107 просмотров · 10 дней назад
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா, மேலகள்ளங்குளம், கே.ஆலங்குளம் மற்றும் நகர்புளியங்குளம் கிராமப் பகுதிகளில், விவசாயத்தையும் நிலத்தடி நீரையும் அடியோடு பாழாக்கும் Stellar Distilleries Private Limited என்ற தனியார் எத்தனால் ஆலைக்கு வரிசையாக அனைத்து அனுமதிகளையும் வழங்கிவிட்டு, தற்போது மக்களிடம் நல்ல பெயர் வாங்க நினைப்பது யாரை ஏமாற்ற? அரசுக்கு மக்கள் மன்றம் வைக்கும் நேரடிக் கேள்விகள் & அசைக்க முடியாத ஆதாரங்கள்: 📄👇 1️⃣ அனுமதி வழங்கவில்லையா? கடந்த 21/09/2026 அன்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் (TNPCB) மூலம் ஆணை எண்: 2602176533856 வாயிலாக ஆலைக்கு CTE (Consent to Establish) அனுமதி வழங்கியது யார்? 2️⃣ சுற்றுச்சூழல் அனுமதி யார் ஆட்சியில்? 05/05/2026 அன்று தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA-TN) ஆணை எண்: EC26C0000TN5873570A மூலம் ஒப்புதல் தந்தது உண்மைதானே? 3️⃣ விவசாயிகளின் நிலத்தடி நீரை உறிஞ்சத் தாரைவார்த்த துரோகம்! குடிநீருக்கே திண்டாடும் காரியாபட்டி பகுதியில், நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு நீர்வளத்துறை (WRD) மூலம் 06/03/2026 அன்று (Certificate No. 210/2026) அனுமதி புதுப்பித்துத் தரப்பட்டது மக்கள் விரோத செயல் இல்லையா? 4️⃣ மேடையில் எதிர்ப்பு... திரைக்குப் பின்னால் வசூல்! நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) மூலம் கடந்த 24/06/2026 அன்று வளர்ச்சி கட்டணமாக ₹3,82,165/- தொகையைப் பெற்றுக்கொண்டு, ஆலை கட்டுமானத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்துவிட்டு பொதுவெளியில் நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்? ⚠️ இறுதி எச்சரிக்கை: ஒருபுறம் அனைத்து அனுமதிகளையும் வாரிக் கொடுத்துவிட்டு, மக்கள் திரண்டு போராடும்போது எதிர்க்கட்சிகள் மீது பழிபோடும் இழிவான அரசியலை உடனடியாக நிறுத்த வேண்டும்! விவசாயிகளையும் பொதுமக்களையும் வஞ்சிக்கும் இந்த எத்தனால் ஆலைக்கு வழங்கப்பட்ட TNPCB CTE ஆணை, நிலத்தடி நீர் NOC மற்றும் DTCP ஒப்புதல்களை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்! தவறும் பட்சத்தில், ஒட்டுமொத்த விவசாயப் பெருமக்களையும் பொதுமக்களையும் திரட்டிப் பெரும் மக்கள் திரள் போராட்டங்கள் வெடிக்கும்! #SaveAgriculture #StopEthanolPlant #Kariyapatti #Virudhunagar #TNPCB #SaveGroundWater #விவசாயத்தை_காப்போம் #எத்தனால்ஆலைவேண்டாம்