திருமழபாடி | பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து | சுந்தரர் தேவாரம்
Shaivamum Thamizhum
0:00 / 0:00
திருமழபாடி | பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து | சுந்தரர் தேவாரம்
3 109 просмотров · 2 г. назад
Shaivamum Thamizhum
3,47 тыс. подписчиков
3 109 просмотров · 2 г. назад
07.024 திருமழபாடி | பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து | சுந்தரர் தேவாரம் | கரூர் சுவாமிநாதன் | @ShaivamumThamizhum
இந்த திருக்கோயிலில் உள்ள சிவனுக்கு பெயர் வச்சிரதம்பேஸ்வரர், அம்மனின் பெயர் அழகம்மை. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை புருஷாமிருகம் பிரம்ம லோகத்தில் இருந்து எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து பூசித்துக் கொண்டிருந்ததாகவும் அதனை மீட்டு எடுத்துச் செல்ல வந்த பிரம்மாவால் எவ்வளவு முயன்றும் அவரால் சிவலிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்ல. அதனால் இது என்ன வயிரத்தூணோ என்று இந்திரன் வியந்து கூறியதால் இறைவன் வயிரத்தூண் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இதையே திருநாவுக்கரசர் தன் பாடலில் "மறைகலந்த மழபாடி வயிரதூணே" என்று பாடுகிறார். திருஞானசம்பந்தரோ "வரிந்த வெஞ்சிலை யொன்று உடையான் மழபாடியைப் புரிந்து கை தொழுமின் வினையாயின போகுமே" என்று இங்கு இறைவனை வணங்குவோர்க்கு வினைகள் யாவும் தீரும் என்று தனது பதிகத்தில் பாடி அருள் செய்திருக்கின்றார்.
இறைவனிடம் சகல வரங்களையும் பெற்ற தனது மகன் செப்பேசர் என்கிற திருநந்திதேவருக்கு திருமணம் செய்ய சிலாத முனிவர் முடிவு செய்தார். அதன்படி வசிஷ்ட முனிவரின் பேத்தியான சுயசாதேவியை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். இத்திருமணம் திருமழப்பாடி திருத்தலத்தில் பங்குனி மாத புனர்பூச நட்சத்திர நாளில் நடந்தது. இன்றைக்கும் இத்திருமண உற்சவம் திருமழபாடியில் வருடம் தோறும் நடைபெறுகிறது.
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வஜ்ஜிரஸ்தம்பேஸ்வரர், ஸ்ரீ வைத்தியநாத சுவாமி
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அழகம்மை, ஸ்ரீ சுந்தராம்பிகை
சுந்தரர் சோழ நாட்டு சிவஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டபோது திருவாலம்பொழிலில் எழுந்தருளியிருந்தார். அப்போது "சுந்தரா, என்னை மறந்தாயோ" என்ற குரல் கேட்டு திடுக்கிட்ட சுந்தரர் அக்குரல் தன்னை ஆட்கொண்ட சிவபெருமானின் குரல் என்பதை உண்ர்ந்தார். அருகில் எங்கேயாவது சிவன் கோவில் இருக்கிறதா என்று தன்னுடன் வந்த சீடர்களைக் கேட்டார். அவர்களும் அருகில் உள்ள மழபாடியில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது என்பதைக் கூறினார்கள். திருமழப்பாடி ஆலயத்திற்கு வந்த சுந்தரர் "தங்களை மறந்து விட்டு வேறு யாரை நினைப்பேன்" என்னும் கருத்து அமைத்து வஜ்ரஸ்தம்ப நாதர் மேல் பதிகம் பாடியருளினார். அந்தப் பதிகம் இதோ...
00:28 பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே. ..... (01)
05:29 கீளார் கோவணமும் திருநீறு மெய் பூசி உன்தன்
தாளே வந்து அடைந்தேன் தலைவா எனை ஏன்றுகொள் நீ
வாளார் கண்ணி பங்கா மழபாடியுள் மாணிக்கமே
கேளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே. ..... (02)
07:34 எம்மான் எம் அன்னை என் தனக்கு எள்தனைச் சார்வு ஆகார்
இம்மாயப் பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்
மைம்மாம் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அம்மான் நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே. ..... (03)
08:39 பண்டே நின்னடியேன் அடியார் அடியார்கட்கு எல்லாம்
தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசு அறுத்தேன்
வண்டார் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்டா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே. ..... (04)
10:06 கண்ணாய் ஏழ் உலகும் கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே. ..... (05)
11:19 நாளார் வந்து அணுகி நலியாமுனம் நின் தனக்கே
ஆளா வந்து அடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள் நீ
மாளா நாள் அருளும் மழபாடியுள் மாணிக்கமே
ஆளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே. ..... (06)
12:49 சந்தாரும் குழையாய் சடைமேல் பிறை தாங்கி நல்ல
வெந்தார் வெண்பொடியாய் விடையேறிய வித்தகனே
மைந்தார் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே. ..... (07)
14:57 வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம்
செய்ய மலர்கள் இட மிகு செம்மையுள் நின்றவனே
மையார் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே
ஐயா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே. ..... (08)
16:54 நெறியே நின்மலனே நெடுமால் அயன் போற்றி செய்யும்
குறியே நீர்மையனே கொடியேர் இடையாள் தலைவா
மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே
அறிவே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே. ..... (09)
18:40 ஏரார் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை
வாரார் கொங்கை உடன் மழபாடியுள் மேயவனை
சீரார் நாவலர் கோன் ஆரூரன் உரைத்த தமிழ்
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே. ..... (10)
பதிகப் பலன் : அழகு பொருந்திய மூன்று புரங்களும் எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனும், கச்சால் கட்டப்பட்ட தனங்களை யுடையவளாகிய உமாதேவியுடன் திருமழபாடியுள் விரும்பி வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானை, புகழ் நிறைந்த திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களாகிய மக்கள், சிவலோகத்தில் இனிது வீற்றிருப்பார்கள்.
ஆலய முகவரி : அருள்மிகு வச்சிரதம்பேஸ்வரர் திருக்கோவில், திருமழபாடி அஞ்சல், அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டம், PIN - 621 851.
குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"