Перейти к содержимому

திருக்கழிப்பாலை | செடியேன் தீவினையில் தடுமாறக் கண்டாலும் | சுந்தரர் தேவாரம்

Shaivamum Thamizhum

0:00 / 0:00

திருக்கழிப்பாலை | செடியேன் தீவினையில் தடுமாறக் கண்டாலும் | சுந்தரர் தேவாரம்

1 085 просмотров · 2 г. назад
Shaivamum Thamizhum
3,47 тыс. подписчиков
1 085 просмотров · 2 г. назад
07.023 திருக்கழிப்பாலை | செடியேன் தீவினையில் தடுமாறக் கண்டாலும் | சுந்தரர் தேவாரம் | கரூர் சுவாமிநாதன் | ‪@ShaivamumThamizhum‬ இத்தலத்தில் சிவலிங்கப் பெருமான வெண்ணிறமுடையவராக விளங்கிறார். அதனாலேயே இறைவன் பால்வண்ண நாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார். இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பால்வண்ணநாதர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ வேதநாயகி வன்றொண்டர் திருக்குருகாவூர் அமர்ந்தருளுங் குழகரைப் பணிந்து பல பதிகளையும் வணங்கித் திருக்கழிப்பாலை சென்று தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். இத்திருப்பதிகம், இறைவரைப் பல்வகையாலும் புகழ்ந்து அருளிச்செய்தது. 00:11 செடியேன் தீவினையில் தடுமாறக் கண்டாலும் அடியான் ஆவா எனாது ஒழிதல் தகவாமே முடிமேல் மாமதியும் அரவும் உடன் துயிலும் வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே. ..... (01) 02:13 எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால் அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி இங்கே என்வினையை அறுத்திட்டு எனையாளும் கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே. ..... (02) 04:38 ஒறுத்தாய் நின்னருளில் அடியேன் பிழைத்தனகள் பொறுத்தாய் எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்துச் செறுத்தாய் வேலைவிடம் மறியாமல் உண்டு கண்டம் கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே. ..... (03) 06:17 சுரும்பார் விண்ட மலர் அவை தூவித் தூங்கு கண்ணீர் அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன் விரும்பேன் உன்னை அல்லால் ஒரு தெய்வம் என் மனத்தால் கரும்பாரும் கழனிக் கழிப்பாலை மேயானே. ..... (04) 08:23 ஒழிப்பாய் என்வினையை உகப்பாய் முனிந்து அருளித் தெழிப்பாய் மோதுவிப்பாய் விலை ஆவணம் உடையாய் கழிப்பால் கண்டடங்கச் சுழி ஏந்து மாமறுகிற் கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே. ..... (05) 10:52 ஆர்த்தாய் ஆடரவை அரையார் புலி அதள்மேல் போர்த்தாய் ஆனையின் தோல் உரிவை புலால் நாறக் காத்தாய் தொண்டு செய்வார் வினைகள் அவைபோக பார்த்தானுக்கு இடமாம் பழியில் கழிப்பாலை அதே. ..... (06) 12:30 பருத்தாள் வன்பகட்டைப் படமாக முன்பற்றி அதள் உரித்தாய் ஆனையின் தோல் உலகந்தொழும் உத்தமனே எரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர் கடியும் கருத்தா தண்கழனிக் கழிப்பாலை மேயானே. ..... (07) 15:05 படைத்தாய் ஞாலமெலாம் படர்புன்சடை எம்பரமா உடைத்தாய் வேள்விதனை உமையாளையோர் கூறுடையாய் அடர்த்தாய் வல்லரக்கன் தலைபத்தொடு தோள்நெரியக் கடல் சாரும் கழனிக் கழிப்பாலை மேயானே. ..... (08) 17:28 பொய்யா நாவதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்றெரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான் செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவரியான் மையார் கண்ணியொடு மகிழ்வான் கழிப்பாலை அதே. ..... (09) 20:01 பழி சேரில் புகழான் பரமன் பரமேட்டி கழியார் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை தொழுவான் நாவலர்கோன் ஆரூரன் உரைத்த தமிழ் வழுவா மாலை வல்லார் வானோர் உலகு ஆள்பவரே. ..... (10) பதிகப் பலன் : பழி பொருந்துதல் இல்லாத புகழையுடையவனும், யாவர்க்கும் மேலானவனும் மேலிடத்தில் உள்ளவனும் ஆகிய கழியின்கண் பொருந்திய செல்வங்கள் பெருகுகின்ற திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற சிவபிரானை, அவனையே தொழுபவனாகிய திருநாவலூரார்க்குத் தலைவனாம் நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைத் தவறு உண்டாகாதபடி பாடவல்லவர்கள், தேவர் உலகத்தை ஆள்பவராவர். ஆலய முகவரி : அருள்மிகு பால்வண்ண நாதர் திருக்கோவில், திருக்கழிப்பாலை, சிவபுரி அஞ்சல், வழி அண்ணாமலை நகர், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம், PIN - 608 002. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"