Перейти к содержимому

‘ஸ்ரீரங்கம் கோவில் அடிமனை ரங்கநாதருக்கே’ - நீதிமன்ற உத்தரவால் பரிதவிக்கும் குடும்பங்கள்

BBC News Tamil

0:00 / 0:00

‘ஸ்ரீரங்கம் கோவில் அடிமனை ரங்கநாதருக்கே’ - நீதிமன்ற உத்தரவால் பரிதவிக்கும் குடும்பங்கள்

68 986 просмотров · 6 месяцев назад
BBC News Tamil
2,78 млн подписчиков
68 986 просмотров · 6 месяцев назад
திருச்சியில் இருந்து சுமார் எட்டு கி.மீ தொலைவில் ஸ்ரீரங்கம் அமைந்துள்ளது. 108 வைணவ கோவில்களில் முதன்மையானதாக இந்தக் கோவில் பார்க்கப்படுகிறது. கோவிலைச் சுற்றியுள்ள உத்தரவீதிகள், சித்திரவீதிகள், அடைய விளைஞ்சான் எனப்படும் கோவில் பரிகார வீதிகள் என 329 ஏக்கர் நிலத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கு ஒன்றில் 'கோவிலைச் சுற்றியுள்ள அடிமனைகள் அனைத்தும் அரங்கநாத சுவாமிக்கே சொந்தம்' என கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதியன்று திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பால் தங்களின் வாழ்வாதாரமே பறிபோய்விட்டதாகக் கூறி ஸ்ரீரங்கம் கோவிலைச் சுற்றி வசிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடுதலாக இதுபற்றி இந்துசமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவிடம் பிபிசி தமிழ் பேசியது. "கோவிலுக்கு அதனைச் சுற்றியுள்ள 329 ஏக்கர் நிலமும் சொந்தம் என்பதற்கான ஆவணங்கள் உள்ளன. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் அங்கு குடியிருப்பதற்கு அனுமதித்துவிட்டோம். ஆனால், அந்த நிலம் கோவில் சொத்து என்பதை அவர்கள் ஏற்க வேண்டும்" என்கிறார். "மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என எந்த இடத்திலும் கூறவில்லை" எனக் கூறும் கூடுதல் ஆணையர் கவிதா, "ஒரு சிலர் மட்டும் கோவில் சொத்துகளை அனுபவிப்பதை ஏற்க முடியாது" என்கிறார். "கோவில் நிலத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும். ஆனால், ஏதோ ஒரு வகையில் அவர்கள் ஒரு தொகையை கோவிலுக்கு செலுத்த வேண்டும். பொதுச் சொத்துகளுக்கு உரிமை கோருவதை அனுமதிக்க முடியாது" எனவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி கள ஆய்வில் தெரியவந்தது என்ன? Producer: Vijayanand Shoot & Edit: Sam Daniel #Srirangam #Trichy இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க:    / @bbcnewssinhala