இலங்கை வானொலியின் அன்பு அறிவிப்பாளர்கள் பி எச் அப்துல் ஹமீத், கே எஸ் ராஜா இருவரும் ஒரே மேடையில்.
M.I.Usanar Saleem- nintavur
0:00 / 0:00
இலங்கை வானொலியின் அன்பு அறிவிப்பாளர்கள் பி எச் அப்துல் ஹமீத், கே எஸ் ராஜா இருவரும் ஒரே மேடையில்.
14 799 просмотров · 5 лет назад
M.I.Usanar Saleem- nintavur
3,72 тыс. подписчиков
14 799 просмотров · 5 лет назад
இலங்கை வானொலியின் முத்துக்கள்
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இரண்டு!
"""""""""""""""
இலங்கை வானொலியின் புகழ்மிக்க அறிவிப்பாளர்கள் உலக அறிவிப்பாளர் ஜனாப் பீ. எச். அப்துல் ஹமீத் அவர்கள், மின்னல் அறிவிப்பாளர் என்று பெயர் பெற்ற அன்பு அறிவிப்பாளர் அமரர் திரு கே. எஸ். ராஜா அவர்களும், இருவரும் ஒரே மேடையில்.
1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு இசைக் கச்சேரியில் , தென்னிந்திய திரைப்படப் பாடகர் திரு.கே .ஜே. ஜேசுதாஸ், மற்றும் பாடகி சகோதரி சுஜாதா ஆகியோர் பாடல்களைப் பாடி அசத்திய, அந்த மாபெரும் மேடையில், நமது இலங்கை வானொலியின் அறிவிப்பின் இரண்டு சிங்கங்களும் , இரண்டு சிகரங்களும் பல்லாயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நிகழ்ச்சியைத் திறமையாகத் தொகுத்து வழங்கிய அற்புத அரிய காட்சி,உண்மையில் அப்படியே மனதை குதூகலிக்க செய்கின்றது.
03/09/2021 அன்று அன்பு அறிவிப்பாளர் அமரர் திரு கே .எஸ் .ராஜா அவர்களின் நினைவு தினம். அந்த நாளைநினைவுகூரும் முகமாக, தனது அன்பு நண்பர் கே .எஸ் .ராஜா அவர்களுடன் தானும் கலந்து கொண்ட, மேடை நிகழ்ச்சியின் பொக்கிஷம் போன்ற ஒளிப்பதிவின் காணொளியை ,எமது உலக அறிவிப்பாளர் ஜனாப் பீ. எச். அப்துல் ஹமீத் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் மிகவும் அன்போடு வெளியீடு செய்திருந்தார்கள்.
அதனையே உலக மக்கள் பார்வைக்காக இங்கே யூடியூப்பில் அடியேன் பதிவு செய்கின்றேன்.அமரர், அன்பின் அறிவிப்பாளர் கே. எஸ் ராஜா அவர்களின் நினைவுகள் என்றும் எங்கள் மனதில் நீங்காமல் வாழும். அன்னாரது பொன்னான ஆத்மா சாந்தி அடைவதாக.
சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த பொக்கிஷமான காணொளியைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்து, (3/9/2021அன்று) தனது நண்பர் கே.எஸ். ராஜாஅவர்களின் நினைவு தினத்தில் தனது முகநூல் பக்கத்தில் வெளியீடு செய்த அன்பு அறிவிப்பாளர், உலக அறிவிப்பாளர் ஜனாப் பீ.எச்அப்துல் ஹமீத் அவர்களுக்கு எவ்வளவுதான் நன்றிகள் கூறினாலும் போதவே போதாது.எமது நெஞ்சார்ந்த அன்பு நன்றிகளும் நல் வாழ்த்துக்களும்,அன்னார் இறையாசிகளோடு வாழ்க என்றும் வளமுடனே! ஆமீன்!!
அன்பின் அபிமான நேயர் என்றும்
""""""""""""""""""""""""""""""""""""""""""'"""""""""'''''''''
எம்.ஐ.உஸனார் ஸலீம்
நிந்தவூர் - இலங்கை ( கி.மா)
0777161224 -0754551230.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
(08/09/2021-புதன்)
"""""""""""""""""""""""""""""""""