வானரங்கள் கனிகொடுத்து | திருக்குற்றாலக் குறவஞ்சி| Thirukkutralak Kuravanji | திரிகூடராசப்ப கவிராயர்
Muthunithi
0:00 / 0:00
வானரங்கள் கனிகொடுத்து | திருக்குற்றாலக் குறவஞ்சி| Thirukkutralak Kuravanji | திரிகூடராசப்ப கவிராயர்
22 просмотра · 9 часов назад
Muthunithi
19 подписчиков
22 просмотра · 9 часов назад
வானரங்கள் கனிகொடுத்து | திருக்குற்றாலக் குறவஞ்சி
இயற்றியவர்: திரிகூடராசப்ப கவிராயர்
குற்றாலம் (கூத்தாலம்) மலைகளின் அழகையும், அங்குள்ள வனவிலங்குகள்,
அருவிகள், மற்றும் இயற்கை எழிலையும் விவரிக்கும் அற்புதமான குறவஞ்சி பாடல்
"வானரங்கள் கனிகொடுத்து". திரிகூடராசப்ப கவிராயர் இயற்றிய இந்த இலக்கியப்
படைப்பு, குற்றாலத் திருகூடமலையை தமிழ் இலக்கிய பாணியில் வர்ணிக்கிறது.
இப்பாடலில் வானரங்கள் (குரங்குகள்), மந்திகள், கானவர்கள் (வேடர்),
வானவர், சித்தர்கள், தேன் அருவிகள், மற்றும் திருகூடமலையின் இயற்கை
எழில் அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளது.
🎵 Song: வானரங்கள் கனிகொடுத்து
📜 Lyrics/Literature: திருக்குற்றாலக் குறவஞ்சி
✍️ Poet: திரிகூடராசப்ப கவிராயர்
🎬 எண்ணமும் ஆக்கமும்: முத்துநிதி.க
Like, Share & Subscribe for more Tamil classical literature and folk songs!
#திருக்குற்றாலக்குறவஞ்சி, #குற்றாலம், #TamilFolkSong #VanarangalKaniKoduthu
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்
குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே;
முழங்குதிரைப் புனலருவி கழங்கெனமுத் தாடும்
முற்றம்எங்கும் பரந்துபெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்
கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம்
கிம்புரியின் கொம்பொடித்து வேம்புதினை இடிப்போம்
செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப்பந் தடிக்கும்
தேன்அலர்சண் பகவாசம் வானுலகில் வெடிக்கும்
வழங்குகொடை மகராசர் குறும்பலவின் ஈசர்
வளம்பெருகும் திரிகூட மலைஎங்கள் மலையே;
இயற்றியவர்: திரிகூடராசப்ப கவிராயர்