கதவைத் திறந்து வைத்தேன் - கானடா - திரு கி. பாலாஜி -10-10-2026 - திரு பொரும்பூர் சிவராமன் ராஜகோபாலன்
Yamuna Raju
0:00 / 0:00
கதவைத் திறந்து வைத்தேன் - கானடா - திரு கி. பாலாஜி -10-10-2026 - திரு பொரும்பூர் சிவராமன் ராஜகோபாலன்
4 530 просмотров · 10 дней назад
Yamuna Raju
2 тыс. подписчиков
4 530 просмотров · 10 дней назад
நவராத்திரி 2026 - பாடல் 2
கனகமஹாலக்ஷ்மி
ராகம் : கானடா
கதவைத் திறந்து
வைத்தேன் - மனக்
கதவைத் திறந்து
வைத்தேன்
கனக மஹா
லக்ஷ்மீ நீயும்
வருவாய் எனவே
காத்திருந்தேன்
(கதவை)
வண்ண வண்ணமாம் அலங்காரத்தில்
வாசலில் உந்தன்
பொன்னுொரு
கண்டேன்
வாயிற் படிகடந்து
வாராயோ - தாய்
வளங்களை அள்ளித்
தாராயோ
(கதவை)
திருவே திருமனம்
வைப்பாயே
தீராக் குறைகளைத்
தீர்ப்பாயே
தேடி வந்தோர்க்குன்
திருவருள் தந்தே
தினமுனைப் பாடிட
வைப்பாயே
கதிரே கனலே
கற்பகத்தருவே
கல்லையும் கனியாய்
ஆக்கும் திருவே
கண்மலர் திறந்தெனைப்
பாராயோ
கலிகள் தீர்ந்திடப்
புரியாயோ
(கதவைத்)
******-*************************
பாடல் இயற்றியவர் :-
திரு கி. பாலாஜி
10.10.2026
காலை 10.45
பாடியவர் :-
திரு பொரும்பூர் சிவராமன் ராஜகோபாலன்
11-10-2026
இரவு
7.30