மங்களமே சுப மங்களமே -திரு கி.பாலாஜி17.10.26-திரு பொரும்பூர் சிவராமன் ராஜகோபாலன் செல்வி எஸ். அபிராமி
Yamuna Raju
0:00 / 0:00
மங்களமே சுப மங்களமே -திரு கி.பாலாஜி17.10.26-திரு பொரும்பூர் சிவராமன் ராஜகோபாலன் செல்வி எஸ். அபிராமி
8 179 просмотров · 3 дня назад
Yamuna Raju
2 тыс. подписчиков
8 179 просмотров · 3 дня назад
2026 நவராத்திரி மங்களம்
ராகம்: மத்யமாவதி
மங்களமே சுப
மங்களமே
மாதா துர்க்கைக்கு
மங்களமே
திங்களைச் சூடிய
திருமால் தங்கைக்கு
தீபங்களாலே
மங்களமே
செந்தாமரைவாழ்
தேவிக்கு நாமும்
சாற்றிடுவோம் மலர்
மங்களமே
வெண்தாமரையில்
வீற்றிடும் வாணிக்குப்
பாட்டினில் இசைப்போம்
மங்களமே
மலைமகள் அலைமகள்
கலைமகள் தமக்கும்
மங்களமே சுப
மங்களமே
எங்களுடன் வந்து
ஒன்பது நாட்கள்
தங்கிய தாயர்க்கு
மங்களமே
ஆதிபராசக்தி
அகிலாண்டேஸ்வரி
அன்னைக்கு நாளும்
மங்களமே
அலர்மேல் மங்கைக்கும்
ஆய கலைகளை
அருளும் வாணிக்கும்
மங்களமே
பாவால் பூவால்
மாலைகள் சாற்றத்
திருவருள் புரிந்தநல்
தேவியர்க்கு
தினமும் மனதால்
மங்களம் பாடிடத்
தங்கிடும் புவியெங்கும்
மங்களமே
**********************************
பாடல் இயற்றியவர் :-
திரு கி.பாலாஜி
17.10.2026
1.30 am
பாடியவர்கள் :-
திரு பொரும்பூர் சிவராமன் ராஜகோபாலன்
செல்வி எஸ். அபிராமி
19-10-2026
இரவு 8.30