Перейти к содержимому

வீரமங்கை வேலுநாச்சியார்✨ | ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய தமிழரசி⚔️ | முழு வரலாற்றுக் கதை

Tri Aura Animations

0:00 / 0:00

வீரமங்கை வேலுநாச்சியார்✨ | ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய தமிழரசி⚔️ | முழு வரலாற்றுக் கதை

1 394 просмотра · 4 дня назад
Tri Aura Animations
3,85 тыс. подписчиков
1 394 просмотра · 4 дня назад
இந்திய வரலாற்றில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரப் பெண்களில் முக்கியமானவர் வீரமங்கை வேலுநாச்சியார். இராமநாதபுரத்தில் இளவரசியாகப் பிறந்து, சிறுவயதிலேயே சிலம்பம், வாள்வீச்சு, வில்வித்தை, குதிரையேற்றம் போன்ற வீரக்கலைகளில் பயிற்சி பெற்றார். பல மொழிகளிலும் புலமை பெற்றார். சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்த வேலுநாச்சியாரின் வாழ்க்கை, 1772ஆம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பிறகு முற்றிலும் மாறியது. கணவரை இழந்த அவர், தன் மகளுடன் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று, பல ஆண்டுகள் தனது படையைத் திரட்டி மீண்டும் போருக்குத் தயாரானார். தாண்டவராயர், மருது சகோதரர்கள், கோபால நாயக்கர் மற்றும் மைசூர் ஆட்சியாளர் ஹைதர் அலியின் ஆதரவுடன் தனது படையை வலுப்படுத்தினார். காளையார்கோவில் போர் முதல், சிவகங்கை கோட்டையை மீட்க வகுக்கப்பட்ட விஜயதசமி திட்டம் வரை… உடையாளின் தியாகம், குயிலியின் வீரச் செயல், மருது சகோதரர்களின் பங்கு என ஒவ்வொரு நிகழ்வும் வேலுநாச்சியாரின் போராட்ட வரலாற்றில் முக்கியமான அத்தியாயங்களாக அமைந்தன. 1780ஆம் ஆண்டு சிவகங்கை மீண்டும் வேலுநாச்சியாரின் ஆட்சிக்குள் வந்தது. “வீரமங்கை வேலுநாச்சியார்” — தைரியம், அறிவு, தலைமைத்துவம் மற்றும் தியாகத்தின் வரலாறு. 🎬 முழு வரலாற்றையும் திரைப்பட பாணியில் காட்சிகளாகப் பாருங்கள். #வேலுநாச்சியார் #VeLuNachiyar #Veeramangai #Sivagangai #TamilHistory #TamilQueen #IndianHistory #MaruthuBrothers #Kuyili #TamilHistoryInTamil