Перейти к содержимому

சரியான அளவுகளுடன் தேங்காய் பர்பி 😍 | பக்குவம் மாறாமல் சூப்பரா செய்யலாம்!

Druti's Kitchen & Vlogs

0:00 / 0:00

சரியான அளவுகளுடன் தேங்காய் பர்பி 😍 | பக்குவம் மாறாமல் சூப்பரா செய்யலாம்!

3 512 просмотров · 9 ч назад
Druti's Kitchen & Vlogs
5,66 тыс. подписчиков
3 512 просмотров · 9 ч назад
🥥 தேங்காய் பர்பி | சரியான அளவுகளுடன் 😍 தேவையான பொருட்கள்: தேங்காய் துருவல் – 1 கப் சர்க்கரை – 1¼ கப் நெய் – 4 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் பொடி – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, தேங்காய் துருவலை நல்ல வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும். அதற்குப் பிறகு சர்க்கரையைச் சேர்த்து, சர்க்கரை மூழ்கும் அளவுக்குக் கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றவும். சர்க்கரை நன்றாகக் கரைந்ததும் வறுத்த தேங்காயைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கலவை கொதிக்கும்போது மீதமுள்ள நெய்யை 2 டேபிள்ஸ்பூன் அளவில் இரண்டு முறை சேர்த்து, தொடர்ந்து நன்றாகக் கிளறிக்கொண்டே இருக்கவும். ஏலக்காய் பொடியையும் சேர்த்துக்கொள்ளவும். கலவை கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டவும். கொஞ்சம் சூடாக இருக்கும்போதே துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். அவ்வளவுதான்! 😍 சரியான அளவுகளுடன் சுவையான தேங்காய் பர்பி தயார்! 🥥 இன்றைக்கு சுவாமிக்கு நைவேத்தியமாகச் செய்த தேங்காய் பர்பி இது. நீங்களும் இந்த அளவுகளில் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்க! 🙏🏻 வீடியோ பிடித்திருந்தால் Like 👍 பண்ணுங்க, Share பண்ணுங்க, மறக்காமல் என் சேனலை Subscribe பண்ணுங்க! ❤️ Hashtags #தேங்காய்பர்பி #CoconutBurfi #CoconutBarfi #தேங்காய்பர்பிசெய்முறை #TamilCooking #TamilRecipe #SweetRecipe #EasySweetRecipe #PerfectMeasurement #Naivedyam #NavaratriSpecial #TraditionalSweets