Перейти к содержимому

கோவில் ஸ்டைல் கதம்ப சாம்பார் சாதம் 🌺 | ரொம்ப ஈஸியா செய்யலாம்!

Druti's Kitchen & Vlogs

0:00 / 0:00

கோவில் ஸ்டைல் கதம்ப சாம்பார் சாதம் 🌺 | ரொம்ப ஈஸியா செய்யலாம்!

2 904 просмотра · 11 ч назад
Druti's Kitchen & Vlogs
5,62 тыс. подписчиков
2 904 просмотра · 11 ч назад
கோவில் ஸ்டைல் கதம்பம் சாம்பார் சாதம் 😋🙏 தேவையான பொருட்கள் அரிசி – 2 கிளாஸ் துவரம் பருப்பு – ½ கிளாஸ் புளி – ஒரு எலுமிச்சம்பழம் அளவு நாட்டு காய்கறிகள் – தேவையான அளவு வெங்காயம் – விருப்பப்பட்டால் சாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் – ¼ மூடி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, கொத்தமல்லி – தாளிக்கவும் அலங்கரிக்கவும் வறுத்து அரைக்க வேண்டிய மசாலா தனியா – 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் துவரம் பருப்பு – ½ டேபிள்ஸ்பூன் மிளகு – ¼ டேபிள்ஸ்பூன் வெந்தயம் – ¼ டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் – காரத்துக்கு ஏற்ற மாதிரி கருவேப்பிலை – கொஞ்சம் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன் செய்முறை முதலில் புளியை ஒரு எலுமிச்சம்பழம் அளவுக்கு எடுத்து ஊற வச்சுக்கோங்க. அரிசி 2 கிளாஸ், துவரம் பருப்பு ½ கிளாஸ் எடுத்து நல்லா கழுவி வச்சுக்கோங்க. அடுத்து ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை எல்லாத்தையும் நல்லா வாசனை வரும்வரை வறுத்துக்கோங்க. இதோட கால் மூடி தேங்காய் சேர்த்து அரைச்சு வச்சுக்கோங்க. இப்போ குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளிச்சு கருவேப்பிலை சேர்த்துக்கோங்க. வெங்காயம் சேர்க்க விருப்பப்பட்டா சேர்த்து வதக்கிக்கலாம். நவராத்திரி என்பதால் நான் வெங்காயம் சேர்க்கல. அடுத்து நறுக்கி வச்சிருக்கிற எல்லா விதமான நாட்டு காய்கறிகளையும் சேர்த்து நல்லா வதக்கிக்கோங்க. ஊற வச்ச புளியைத் தண்ணீரில் கரைச்சு ஊத்துங்க. அதோட ஒரு டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி, அரைச்சு வச்ச மசாலா விழுது, கழுவி வச்ச அரிசி, துவரம் பருப்பு எல்லாத்தையும் சேர்த்துக்கோங்க. தேவையான அளவு தண்ணீர் ஊத்தி, உப்பு சேர்த்து நல்லா கலந்து குக்கரை மூடி 4 விசில் வரும்வரை வேக வச்சு அடுப்பை அணைச்சிடுங்க. குக்கர்ல பிரஷர் இறங்கினதும் திறந்து மேலே கொத்தமல்லி, கருவேப்பிலை தூவி, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டுக் கலக்குங்க. அவ்வளவுதான்! ரொம்ப சுவையான கோவில் ஸ்டைல் கதம்பம் சாம்பார் சாதம் தயார்! 😍🙏 வீட்டிலேயே கோவில் பிரசாதம் சுவையில் இந்தக் கதம்பம் சாம்பார் சாதத்தை செஞ்சு பாருங்க! #கதம்பம்சாம்பார்சாதம் #கோவில்ஸ்டைல் #TempleStyleSambarSadham #KadhambaSadham #TamilCooking #TraditionalRecipe #NavaratriRecipes