இருதயத்தின் ஆழத்தை அறிந்த என் தேவனே || Tamil Christian Worship Song || Irudhayathin Aazhatthai ||
Aura with YESAPPA
0:00 / 0:00
இருதயத்தின் ஆழத்தை அறிந்த என் தேவனே || Tamil Christian Worship Song || Irudhayathin Aazhatthai ||
1 633 просмотра · 2 недели назад
Aura with YESAPPA
29 подписчиков
1 633 просмотра · 2 недели назад
#irudhayathinaazhatthai #tamilchristianworship #jesuslovesyou
#aurawithyesappa #allthingsarepossible
லாக்டவுன் காலத்தில் எழுதப்பட்ட இந்தப் பாடல், விசுவாசத்தையும் மீட்பையும் கண்டடைவதைப் பற்றிய மிகவும் தனிப்பட்ட பிரதிபலிப்பாகும். இது, கடவுளின் அருள் எவ்வாறு இதயத்தைத் தூய்மைப்படுத்தி, ஆன்மாவை மீட்டெடுக்கிறது என்பதை ஆராய்கிறது. ஒவ்வொரு போராட்டத்திலும், சந்தேகத்தின் தருணத்திலும், அவருடைய பிரசன்னம் என் மறைந்துபோன திறமைகளை மாற்றி, என் படிகளை வழிநடத்தும் நிலையான ஆற்றலாக இருந்துள்ளது. இது, தளராத ஆதரவு, தெய்வீகப் பாதுகாப்பு மற்றும் நான் கேட்கும் முன்பே அவருக்கு என் தேவைகள் தெரியும் என்பதை உணர்ந்துகொள்வதன் பயணம்.❤️🩹🌺
[Song Lyrics]
இருதயத்தின் ஆழத்தை அறிந்த என் தேவனே
என்னை மன்னித்து ஏந்திடும் தயாளனே!
எனை மேம்படுத்தி கிருபையால் காப்பவரே
இம்மட்டும் தாங்கி என்னை நடத்துவாரே!
ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! என் இயேசப்பா!
இவ்வளவு அன்புக்கு கோடி நன்றி அப்பா!
ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! அல்லேலுயா!
ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! அல்லேலுயா!
திறமைகளைத் திடப்படுத்தி வலுவூட்டும் தேவனே
தினம் தேற்றி நடத்திடும் ஜீவனே!
தாழ்ந்துவிடா வண்ணம் தாங்கிப் பிடிக்கின்றீர்
தாழ்மையாய் உள்ளம் புகுந்து ஆளுகின்றீர்!
விசாரங்கள் யாவையும் அறிந்தென்னைத் தேற்றுகிறீர்
விழிமூடும் நேரம் தட்டித் தூங்க வைக்கின்றீர்!
ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! என் இயேசப்பா!
இவ்வளவு அன்புக்கு கோடி நன்றி அப்பா!
ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! அல்லேலுயா!
ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! அல்லேலுயா!
மற்றுள்ளோர் குறை நோக்கி கடிந்துரைக்காமல்
என் நாவைக் காக்கும் பரம தேவனே!
அவமானம் நீக்கி என்னை அன்று தப்புவித்தீர்
யாரும் இல்லா வேளை என் கை பிடித்தீர்!
கண்ணீரின் நேரத்தில் ஆறுதலாய் வந்தீரே
கலங்காதே மகனே என்று அணைத்துக் கொண்டீரே!ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! என் இயேசப்பா!
இவ்வளவு அன்புக்கு கோடி நன்றி அப்பா!
ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! அல்லேலுயா!
ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! அல்லேலுயா!
தேவைகள் யாவையும் முன்னமே அறிந்தவரே
நன்மையும் கிருபையும் அள்ளித் தருபவரே!
திரளாய் பெருகச் செய்யும் வல்ல தேவனே
தினம் எனை ஆசீர்வதிக்கும் நல்ல தேவனே!
நேசிக்க யாரும் இல்லா உலகினிலே - என்னை
உயிராய் நேசிக்கும் உன்னதத் தெய்வமே!
ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! என் இயேசப்பா!
இவ்வளவு அன்புக்கு கோடி நன்றி அப்பா!
ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! அல்லேலுயா!
ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! அல்லேலுயா!