உணவே உணவே - திருவிருந்து பாடல் - unave unave - Holy Communion Song
Annai Vailankanni Church KTN DGL
0:00 / 0:00
உணவே உணவே - திருவிருந்து பாடல் - unave unave - Holy Communion Song
207 просмотров · 9 дней назад
Annai Vailankanni Church KTN DGL
83 подписчика
207 просмотров · 9 дней назад
உணவே உணவே - திருவிருந்து பாடல் - unave unave - Holy Communion Song - அன்னை வேளாங்கன்னி மாதா ஆலயம் - குமரன் திருநகர் பங்கு - திண்டுக்கல் மறைமாவட்டம்
உணவே உணவே உயிருள்ள உணவே
உறவே உறவே அழியா உறவே
விருந்தே விருந்தே அன்பின் விருந்தே
மருந்தே மருந்தே இறை வாழ்வின் மருந்தே
விண்ணக வாழ்வின் முன்சுவையாய்
இயேசுவே வாரும்
மண்ணக வாழ்வு மாண்புறவே
வரங்கள் தாரும்
பல்லவி - 1
திரு உடலை உண்டு திரு இரத்தம் பருக
நிலைவாழ்வு எனதாகுமே
என் கடமை முடிக்க உன் பணியில் சிறக்க
உமதாற்றல் துணையாகுமே
பசி தாகம் இல்லாமல் செய்கின்ற உணவே
விசுவசித்து ஏற்போர்க்கு தெவிட்டாத அமுதே
பணிந்தும்மை வணங்குகிறோம் கனிவோடு வருவாயே...
பல்லவி - 2
விண்ணில் இருந்து இறங்கி வந்த உணவே
உன்னை உண்டு என்றும் வாழ்வேன்
உலகம் வாழ அதுவும் நிறைவாய் வாழ
தனை அளிக்கும் அன்பை உணர்ந்தேன்
முன்னோர்கள் உண்டிட்ட உணவன்று இதுவே
எந்நாளும் வாழ்விக்கும் இறையன்பின் உருவே
புலனுக்குப் புலப்படா பூரணமே ஆரணமே...