தோடுடைய செவியன் பாடல் 2 & 3 விளக்கம் I Thodudaiya Seviyan Song 2 & 3 Meaning in Tamil
I Bakthi Pasi
0:00 / 0:00
தோடுடைய செவியன் பாடல் 2 & 3 விளக்கம் I Thodudaiya Seviyan Song 2 & 3 Meaning in Tamil
3 953 просмотра · 3 г. назад
I Bakthi Pasi
122 тыс. подписчиков
3 953 просмотра · 3 г. назад
Part 03
• தோடுடைய செவியன் பாடல் 4 & 5 விளக்கம் I Tho...
தித்திக்கும் தேவாரம் 10
பாடல் 2
முற்ற லாமையிள நாகமோ டேன முளைக் கொம் பவைபூண்டு
வற்ற லோடுகல னாப்பலி தேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
கற்றல் கேட்டலுடை யார்பெரி யார்கழல் கையாற் றொழுதேத்தப்
பெற்ற மூர்ந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே
பதம் பிரித்து
______________________
முற்றல் ஆமை இள நாகமோடே என முளைக் கொம்பு அவை பூண்டு
வற்றல் ஓடு கலனாப்பலி தேர்ந்து எனது உள்ளங் கவர் கள்வன்
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்தப்
பெற்ற மூர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
___________________________________________________________________________
பாடல் 3
நீர்ப ரந்தநிமிர் புன்சடை மேலோர் நிலாவெண் மதிசூடி
ஏர்ப ரந்தவின வெள்வளை சோரவென் னுள்ளங் கவர்கள்வன்
ஊர்ப ரந்தவுல கின்முத லாகிய வோரூ ரிதுவென்னப்
பேர்ப ரந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே
பதம் பிரித்து
______________________
நீர் பரந்த நிமிர் புன்சடை மேல் ஓர் நிலா வெண்மதி சூடி
ஏர் பரந்த இன வெள்வளை சோர என் உள்ளங் கவர் கள்வன்
ஊர் பரந்த உலகின் முதலாகிய ஓரூர் இது என்னப்
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
#ibakthipasi #kannappan #thirugnanasambandar #devaram #sirkazhi