Перейти к содержимому

SONG | அடைக்கலப் பத்து புலவர் திரு சுந்தரேசன்| #AdaikalaPathu #omsakthi #melmaruvathur #amma #guru

Adhi Swara

0:00 / 0:00

SONG | அடைக்கலப் பத்து புலவர் திரு சுந்தரேசன்| #AdaikalaPathu #omsakthi #melmaruvathur #amma #guru

158 678 просмотров · 4 г. назад
Adhi Swara
73,2 тыс. подписчиков
158 678 просмотров · 4 г. назад
Lyrics: Pulavar Sakthi Sundaresan Singers: Sneha, Ajaey Shravan Harmonies: Daisy, Disadhana, Monica Music Composer : Radhika Sivaraj Rhythm Programming - Edwin Selvaraj Programming, Mixing - Sasi Keys "அடைக்கலப் பத்து" புலவர் திரு. மு. சுந்தரேசன் எம்.ஏ.,சி இ.டி., Chorus வாழிய! வாழிய! மேல்மருவத்தூர் அன்னை பராசக்தி! 'போற்றி! போற்றி சுயம்பென வந்த ஆதிபராசக்தி 1. மருவத் தூரெனும் இத்தலத் திடை எமைக் காத்தருள் புரிந்திட வந்தவளே! பெருநெறி தருநெறி யருள்நெறி யேஎனப் புரிந்திடச் செய்திடு பரம் பொருளே! கருவிடை உயிராய்த் தோன்றிய நாள்முதல் காத்து வளர்ந்திடும் அன்னையளே! உருவென அருவென அருவுரு எனவுரு மூவுரு கொண்ட முதற் பொருளே! 2. வானென வளியென தீயென நீரென நிலமென ஐம்பொருள் ஆனவளே! ஊனென உயிரென உள்ளுறை பொருளென உடனிருந் தென்றும் காப்பவளே! தேனென பாலென திகழொலி யமுதென நினைப்பவர் நெஞ்சில் இனிப்பவளே! மீனென இணைவிழி காட்டி உயிர்க்குலம் கோடி வளர்த்திடு தாயவளே! 3. கலைமகள் திருமகள் மலைமகள் எனமும் மகளிரைப் பெற்றொளிர் முதுமகளே! உலகுறைந் துலவிடு தெய்வம் பலப்பல துதித்திடு தலைமகள் ஆனவளே! நிலவிய கடலெனும் பிறவிஎனுங் கடல் மீட்டிட வந்திடு துணையவளே! உலகிடை கோடி உயர்த்திரள் பெற்றும் கன்னி யெனப் பெயர் கொண்டவளே! 4. தூணிடை துரும்பிடை திகழ்ந்திடு பொருள்களில் எங்கும் இயங்கிடும் சத்தியளே! கோணென அனுவிடை ஆயிரங் கூறுடை யொருபொருள் தன்னில் இருப்பவளே! ஆணென பெண்ணென மாந்தர் குலத்திரு வகையென வைத்துயிர் வளர்ப்பவளே! ஆணிணில் பெண்ணையும் பெண்ணினில் ஆணையும் அமைவோடு சேர்த்திடு சக்தியளே! 5. பயிரவி பஞ்சமி மாலினி சூலினி நீலி கபாலினி ஆனவளே! வயிரவி வைணவி சங்கரி சுந்தரி நல்லபி ராமீ ஆனவளே! மயிடனைச் செற்ற மறத்தொடும் அன்னவன் எருமைத் தலைமிசை நின்றவளே! மயர்வற மதிநலம் பெற்றிடும் அமரர்தம் இடர்தனைப் போக்கிய மறத்தியளே! 6. சித்தரும் முனிவரும் சூழ்த்துள அமரரும் தொழுதிடத் தோன்றிடு முதல்வியளே! இத்தரை மாந்தருக் கெளிதென நின்னருள் விழிப்புனல் தோய்வுற வைத்தவளே! பித்த மனத்தவர் சித்தம் தெளிந்திட தெய்வத மாட்சியைத் தெரித்தவளே! எத்தவம் செய்தோம்? எந்நெறி நின்றோம்?எளிதென இனிதெமை ஆண்டவளே! 7. அருள்நெறி படர்தரும் ஆத்திகர் தம்மை யடித்து வளர்ப்பதும் உன்னருளே! மருள்நெறி படர்தரும் நாத்திகர் தம்மை யணைத்து வளர்ப்பதும் உன்னருளே! இருவினைப் பயன்கொடுத் தறநெறி காட்டிட உலகெனும் பள்ளியில் வைத்தவளே! பிறவிகள் பலபலத் தொடரவும் எங்களைத் தொடர்ந்திடு தோன்றாத் துணையவளே! 8. இத்தரை வேப்பிலை வண்டென மாற்றி இயங்க உயர்ப்பொடு தந்தவளே! பக்தர் சிலர்க்குயர் சுயம்பினில் ஓமெனும் மந்திரம் காட்டிய அன்னையளே! பித்த மனத்தவர் சித்தம் தெளிந்திட சித்துக்கள் ஆடிய பெருமையளே! சித்துக்கள் காட்டியிச் சிந்தையில் தெய்வதம் ஏற்றிய மூலம றைப் பொருளே! 9. படர்தரும் இடரெனும் பணிக ளகற்றிட பாங்குற வந்தொளிர் கதிர்மகளே! சுடர்தரும் ஒளியென சுயம்பினில் வந்தொளிர் கின்ற பெருஞ்சுடர் ஆனவளே! இடர்தரு கலிதனில் இணையடி தந்தெமை ஈர்த்திட வந்திடு மலைமகளே! கொடுங்கலி ஓட்டிடக் குறைபல போக்கிடச் சிலம்பணி திருவடித் தருபவளே! 10. மற்றொரு பற்றினி இல்லை யெனக் கொடு நின்திரு வடியிணை பற்றிவிட்டோம்! சுற்றிய சுற்றமும் உற்றிடு உறவொடும் நீத்துணைப் பற்றெனப் பற்றிவிட்டோம்! கற்றிடு கல்வியும் காசொடு செல்வமும் நிலையில்லை என்றுனைப் பற்றிவிட்டோம்! புற்றுறை அரவென உறைந்திடு தாயே! புகலிடம் நீயெனப் பற்றிவிட்டோம்