Перейти к содержимому

பூந்தி செய்யாமலே ஜூஸியான லட்டு 😍 கடலைப்பருப்பு இருந்தா போதும்!

Druti's Kitchen & Vlogs

0:00 / 0:00

பூந்தி செய்யாமலே ஜூஸியான லட்டு 😍 கடலைப்பருப்பு இருந்தா போதும்!

5 140 просмотров · 21 час назад
Druti's Kitchen & Vlogs
5,79 тыс. подписчиков
5 140 просмотров · 21 час назад
பூந்தி செய்யாமலே சூப்பரான ஜூஸியான லட்டு 😍 | கடலைப்பருப்பு லட்டு தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு – 1 கப் சர்க்கரை – 1½ கப் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு நெய் – சிறிதளவு முந்திரிப்பருப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கப் கடலைப்பருப்பை நல்லா இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் தண்ணீர் முழுவதையும் வடித்துவிட்டு, மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக மைய அரைத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அரைத்த கடலைப்பருப்பு விழுதைப் பக்கோடா மாதிரி சிறு சிறு துண்டுகளாகப் போட்டு நன்றாகப் பொரித்து எடுத்து வைக்கவும். இப்போது ஒரு கடாயில் ஒன்றரை கப் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். சர்க்கரை முழுவதும் கரைந்து, ஒரு கொதி வந்து கையில் லேசான பிசுபிசுப்புத் தன்மை வரும் பதம் வந்தால் போதும். அதிகமாகக் காய்ச்ச வேண்டாம். சுமார் ஒரு நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும். பிறகு பொரித்து வைத்த கடலைப்பருப்பு பக்கோடாக்களை மிக்ஸியில் போட்டு, கரகரப்பாக ஒரு சுற்று அரைத்துக்கொள்ளவும். இதைச் சர்க்கரைப் பாகில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கொஞ்சம் நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து அதையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சுமார் 10 நிமிடங்கள் ஆறவிட்டு, கையில் பிடித்துப் பார்த்து லட்டுகளாகப் பிடிக்கவும். அவ்வளவுதான்! 😍 பூந்தி செய்யாமலேயே சூப்பரான, ஜூஸியான ஸ்வீட் ஸ்டாலில் கிடைக்கும் லட்டு மாதிரி வீட்டிலேயே சுலபமாகச் செய்துவிடலாம். நீங்களும் இந்த முறையில் செய்து பாருங்கள்! வீடியோ பிடித்திருந்தால் Like 👍 பண்ணுங்க, Share பண்ணுங்க, மறக்காமல் Subscribe பண்ணுங்க ❤️ Hashtags: #கடலைப்பருப்புலட்டு #லட்டு #ஜூஸியானலட்டு #பூந்திஇல்லாமல்லட்டு #LadduRecipe #SweetRecipeTamil #TamilCooking #HomemadeSweets #EasySweetRecipe #DurtheesKitchen