வாயில போட்டதும் கரையும் பொட்டுக்கடலை மாவு லட்டு | சூப்பர் டேஸ்ட்!
Druti's Kitchen & Vlogs
0:00 / 0:00
வாயில போட்டதும் கரையும் பொட்டுக்கடலை மாவு லட்டு | சூப்பர் டேஸ்ட்!
7 701 просмотр · 2 дня назад
Druti's Kitchen & Vlogs
5,63 тыс. подписчиков
7 701 просмотр · 2 дня назад
🌸 நவராத்திரி ஸ்பெஷல் பொட்டுக்கடலை மாவு லட்டு 🌸
😋 வீட்டில் இருக்கிற பொருட்களை வச்சே ரொம்ப சுலபமா, சுவையான பொட்டுக்கடலை மாவு லட்டு செஞ்சிடலாம். நவராத்திரி நைவேத்தியத்துக்கும் இது ஒரு சூப்பரான ஸ்வீட்!
தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை – 1 கப்
சர்க்கரை – 1¼ கப்
நெய் – 4 முதல் 5 டேபிள்ஸ்பூன்
முந்திரிப் பருப்பு – சிறிதளவு
ஏலக்காய் – சிறிதளவு
செய்முறை:
முதலில் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துத் தனியாக வச்சுக்கோங்க.
அதே மாதிரி சர்க்கரையையும் நைசாக அரைத்து எடுத்துக்கோங்க.
அரைத்த பொட்டுக்கடலை மாவு, சர்க்கரைப் பொடி ரெண்டையும் ஒண்ணா கலந்து வச்சுக்கோங்க.
ஒரு கடாயில் கொஞ்சம் நெய் விட்டு முந்திரிப் பருப்பை வறுத்து மாவுக் கலவையில் சேர்த்துக்கோங்க. ஏலக்காயையும் சேர்த்துக்கோங்க.
மீதமுள்ள நெய்யை சூடாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக மாவில் ஊற்றி நல்லா கலந்துக்கோங்க.
கையில் பிடிக்கிற பதம் வந்ததும் சிறு சிறு உருண்டைகளாகப் பிடிச்சா சுவையான பொட்டுக்கடலை மாவு லட்டு ரெடி!
🙏 இந்த நவராத்திரிக்கு நீங்களும் வீட்டிலேயே இந்த ஈஸியான லட்டை செஞ்சு பாருங்க. உங்களுக்குப் பிடிச்சிருந்தா வீடியோவை லைக் பண்ணி, உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. ❤️
#பொட்டுக்கடலைலட்டு #பொட்டுக்கடலைமாவுலட்டு #நவராத்திரிஸ்பெஷல் #நவராத்திரிநைவேத்தியம் #லட்டு #LadduRecipe #PottukadalaiLaddu #NavaratriSpecial #EasySweetRecipe #TamilCooking #DurtheesKitchen