Перейти к содержимому

19ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!இலஞ்சி முருகன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடையா?

வேந்தன் ஊடகம் - Venthan oodagam

0:00 / 0:00

19ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!இலஞ்சி முருகன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடையா?

2 191 просмотр · 3 дня назад
வேந்தன் ஊடகம் - Venthan oodagam
15 тыс. подписчиков
2 191 просмотр · 3 дня назад
தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே மலைஅடிவாரத்தை ஒட்டிய ஒரு நிலத்தில் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ‘குருவிமேடு’ என்று அழைக்கப்படும் பகுதியில் கண்டறியப்பட்ட இந்தக் கல்வெட்டு, 12 வரிகளைக் கொண்ட முற்றுப்பெறாத கல்வெட்டாக உள்ளது. அதன் அடிப்பகுதியில் வேலும், பாம்பைக் கவ்விய மயிலும் புடைப்புச் சிற்பங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டின் எழுத்தமைதி 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. கல்வெட்டில் குறிப்பிடப்படும் நாளுக்கான ஆங்கிலத் தேதி 04.09.1801 ஆகும். கல்வெட்டில் “தளவாய்முதலியாரய்யன் விட்டுக் கொடுத்தது குருவி...” என்ற செய்தியின் ஒரு பகுதி காணப்படுகிறது. அதன் தொடர்ச்சிப் பகுதி சிதைந்து போயிருப்பதால் முழுமையான செய்தியை அறிய முடியவில்லை. இது ஒரு நிலக்கொடை கல்வெட்டாக இருக்கலாம். கல்வெட்டில் வேலும் மயிலும் பொறிக்கப்பட்டுள்ளதால், இது இலஞ்சி முருகன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. முருகனுக்குக் கொடை அளிக்கப்படும் நிலங்கள் சில சாசனங்களில் ‘திருவிளையாட்டம்’ என்று குறிப்பிடப்படுகின்றன. அந்த வகையில், கல்வெட்டு கண்டறியப்பட்ட இந்த நிலமும் முருகனுக்குரிய திருவிளையாட்ட நிலமாக இருக்கலாம். எனினும், கல்வெட்டு முற்றுப்பெறாமல் இருப்பதால் இதனை உறுதிப்படுத்துவதற்குப் போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை. இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் தளவாய் முதலியாரய்யன் யார்? 1801ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு என்ன செய்தியைப் பதிவு செய்கிறது? இலஞ்சி முருகன் கோயிலுக்கும் இந்த நிலத்திற்கும் என்ன தொடர்பு? இந்தக் காணொளியில் கல்வெட்டின் வரலாற்றுப் பின்னணியையும், கிடைத்துள்ள சான்றுகளையும் விரிவாகப் பார்க்கலாம்.