Перейти к содержимому

நீயா நீயா எந்தன் வாழ்வே நீயா | புதிய தமிழ் கிறிஸ்தவ பாடல் | New Tamil Christian Song 2026

fr. devamadurai

0:00 / 0:00

நீயா நீயா எந்தன் வாழ்வே நீயா | புதிய தமிழ் கிறிஸ்தவ பாடல் | New Tamil Christian Song 2026

1 222 просмотра · 4 мес. назад
fr. devamadurai
1,34 тыс. подписчиков
1 222 просмотра · 4 мес. назад
பாடல் & பண் : Fr. தேவா இசைக் கோர்வை : AI assisted வீடியோ : Fr. தேவா #TamilChristianSong #ChristianDevotional #JesusSongs #NewChristianSong #TamilWorship #NeeyaNeeya #கிறிஸ்தவபாடல்கள் #இயேசுவே #TamilChristianLyrics ​🎵 பாடலின் வரிகள் (Song Lyrics): ​பல்லவி: நீயா நீயா எந்தன் வாழ்வே நீயா நீயா நீயா எந்தன் எல்லாம் நீயா நீயா நீயா எந்தன் சொந்தம் நீயா யேசுவே நீயா வாழ்வின் பந்தம் நீயா ​எந்நாளும் உனக்காக ஏங்கும் நெஞ்சம் உன்னாலே உன்னாலே தேடும் தஞ்சம் பூப்போல தேன் போல தேன் கொஞ்சும் வண்டு போல உனை தேடி வந்தேன் நான் உறவாகவே வாழ்வோடு வழியாக வசந்தங்கள் நிறைவாக உன்னோடு நான் வாழ்வேன் இனிதாகவே ​சரணம் 1: விழி பேசும் மொழியோடு கவி ஒன்று நான் பாட உயிர் சேர்க்கும் யேசுவே கை கோர்த்து நான் ஆட மழைக்கால மேகம் போல் பொழிகின்ற உன் அன்பு நெஞ்சோடு எந்நாளும் நீங்காத பேரன்பு இரவெல்லாம் நீதானே விண்மீனாய் ஒளிர்கின்றாய் பகலெல்லாம் நீதானே நிழலாகத் தொடர்கின்றாய்! ​சரணம் 2: அலையோடு விளையாடும் கரையாக நான் வாழ அன்போடு எனை ஆளும் அரணாக நீ சூழ காற்றோடு கலக்கின்ற குழலோசை நீதானே என் நெஞ்ச முற்றத்தில் பூக்கின்ற பூவே நீதானே யுகம் நூறு கடந்தாலும் மாறாது இந்த பந்தம் யேசுவே உன்னோடு நான் வாழும் ஒவ்வொரு நொடியும் சந்தோசம்!