Перейти к содержимому

திருக்கருகாவூர் | குருகாம் வயிரமாம் கூறு நாளாம் | திருநாவுக்கரசர் தேவாரம் | ‪@ShaivamumThamizhum‬

Shaivamum Thamizhum

0:00 / 0:00

திருக்கருகாவூர் | குருகாம் வயிரமாம் கூறு நாளாம் | திருநாவுக்கரசர் தேவாரம் | ‪@ShaivamumThamizhum‬

203 просмотра · 3 мес. назад
Shaivamum Thamizhum
3,48 тыс. подписчиков
203 просмотра · 3 мес. назад
06.015 திருக்கருகாவூர் | குருகாம் வயிரமாம் கூறு நாளாம் | திருநாவுக்கரசர் தேவாரம் #MullaivananatharTemple | #Thirukkarukavur | #ShivamumThamizhum முல்லை வனத்தில் முல்லைக் கொடிகளால் சூழப்பட்டு இருந்ததால் இன்றும் சிவலிங்கத் திருமேனியில் முல்லைக் கொடிகளின் தழும்பு இருக்கக் காணலாம். புற்று ரூபத்தில் லிங்கம் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டுமே சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. இத்தலத்து இறைவி கருகாத்த நாயகி என்றும் கர்ப்ப ரட்சாம்பிகை என்றும் அழைக்கபடுகிறாள். குழந்தைப் பேறு கிட்டவும், திருமணம் நடைபெறவும் இங்கு அம்பாள் கருகாத்த நாயகியை பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர். பஞ்ச ஆரண்ய ஸ்தலங்கள் என்று குறிப்பிடப்படும் ஐந்து சிவஸ்தலங்களை ஒரே நாளில் ஐந்து கால பூஜைகளில் கலந்து கொண்டு வழிபாடு செய்து வந்தால் இப்பிறவியில் செய்த சகல பாபங்களும் நீங்கி மறு பிறவி இல்லா நல்வாழ்வு கிட்டும் என்று அகஸ்திய முனிவர் கூறியுள்ளார். அந்த வகையில் திருக்கருகாவூர் ஸ்தலம் விடியற்காலை உஷத் காலம்(காலை 5-30 மணி முதல் 6 மணி வரை) வழிபாடு செய்ய வேண்டிய தலமாகும். இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ முல்லைவன நாதர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகை கருகாவூர் என்றதும் அனைவருக்கும், கருவில் உள்ள உயிரினைக் காக்கும் கர்ப்ப ரக்ஷாம்பிகை அம்மன் நினைவு தோன்றும். ஆனால் அப்பர் பெருமானுக்கு, இந்த உலகம் தோன்றுவதற்கு கருவாக இருக்கும் இறைவனின் நினைவு வருகின்றது. எங்கும் எதையும் சிவமாக பார்க்கும் அப்பர் பிரான், மாயையில் ஒடுங்கிய உலகத்தையும் உலகப் பொருட்களையும் மீண்டும் தோற்றுவிக்கும் பெருமானின் குணத்தைக் குறிப்பிட்டு, இறைவனின் அனாதித் தன்மையை நமக்கு பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்துகின்றார். இந்த பதிகம் தம்பதிகள், தங்களிடையே ஒற்றுமை நிலவவும், தங்களுக்குள் இடையே உள்ளே பிணக்குகள் தீரவும் ஓதவேண்டிய பதிகமாக கருதப்படுகின்றது. 00:14 குருகாம் வயிரமாம் கூறு நாளாம் கொள்ளும் கிழமையாம் கோளே தானாம் பருகா அமுதமாம் பாலின் நெய்யாம் பழத்தின் இரதமாம் பாட்டில் பண்ணாம் ஒருகால் உமையாளோர் பாகனுமாம் உள்நின்ற நாவிற்கு உரையாடியாம் கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே. ..... (01) 04:06 வித்தாம் முளையாகும் வேரே தானாம் வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனுமாம் பால் நிறமுமாம் பரஞ்சோதி தானாம் தொத்தாம் அமரர் கணம் சூழ்ந்து போற்றத் தோன்றாது என் உள்ளத்தின் உள்ளே நின்ற கத்தாம் அடியேற்கும் காணா காட்டும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே. ..... (02) 05:33 பூத்தானாம் பூவின் நிறத்தானுமாம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற கோத்தானாம் கோல்வளையாள் கூறனாகும் கொண்ட சமயத்தார் தேவனாகி ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவானாம் என் நெஞ்சத்தின் உள்ளே நின்று காத்தானாம் காலன் அடையா வண்ணம் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே. ..... (03) 07:10 இரவனாம் எல்லி நடமாடியாம் எண்திசைக்கும் தேவனாம் என்னுளானாம் அரவனாம் அல்லல் அறுப்பானுமாம் ஆகாச மூர்த்தியாம் ஆனேறு ஏறும் குரவனாம் கூற்றை உதைத்தான் தானாம் கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும் கரவனாம் காட்சிக்கு எளியனுமாம் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே. ..... (04) 08:35 படைத்தானாம் பாரை இடந்தானாகும் பரிசு ஒன்று அறியாமை நின்றான் தானாம் உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்ளழலால் மூட்டி ஒருக்கி நின்று அடைத்தானாம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தானாம் ஆனேறு ஒன்று ஊர்ந்தானாகும் கடைத்தானாம் கள்ளம் அறிவார் நெஞ்சில் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே. ..... (05) 10:08 மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம் மூவாத மேனி முக்கண்ணினானாம் சீலனாம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வனாம் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம் மாலனாம் மங்கையோர் பங்கனாகும் மன்றாடியாம் வானோர் தங்கட்கெல்லாம் காலனாம் காலனைக் காய்ந்தானாகும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே. ..... (06) 11:53 அரைசேர் அரவனாம் ஆலத்தானாம் ஆதிரை நாளானாம் அண்ட வானோர் திரைசேர் திருமுடித் திங்களானாம் தீவினை நாசன் என் சிந்தையானாம் உரைசேர் உலகத்தார் உள்ளானுமாம் உமையாளோர் பாகனாம் ஓத வேலிக் கரைசேர் கடல் நஞ்சை உண்டானாகும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே. ..... (07) 13:25 துடியாம் துடியின் முழக்கம் தானாம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பானாம் படி தானாம் பாவம் அறுப்பானாகும் பால் நீற்றனாம் பரஞ்சோதி தானாம் கொடியானாம் கூற்றை உதைத்தானாகும் கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும் கடியானாம் காட்சிக்கு அரியானாகும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே. ..... (08) 14:51 விட்டுருவம் கிளர்கின்ற சோதியானாம் விண்ணவர்க்கும் அறியாத சூழலானாம் பட்டுருவ மால் யானைத் தோல் கீண்டானாம் பல பலவும் பாணி பயின்றான் தானாம் எட்டுருவ மூர்த்தியாம் எண்தோளானாம் என் உச்சி மேலானாம் எம்பிரானாம் கட்டுருவம் கடியானைக் காய்ந்தானாகும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே. ..... (09) 16:28 பொறுத்திருந்த புள்ளூர்வான் உள்ளானாகி உள்ளிருந்து அங்கு உள்நோய் களைவான் தானாய் செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச் சிலை குனியத் தீமூட்டும் திண்மையானாம் அறுத்திருந்த கையானாம் அந்தார் அல்லி இருந்தானை ஒரு தலையைத் தெரிய நோக்கிக் கறுத்திருந்த கண்டம் உடையான் போலும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே. ..... (10) 17:54 ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்ளழலை மாட்டி உடனே வைத்து இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும் இசைத்தானாம் இன்னிசைகள் கேட்டானாகும் அறுத்தானாம் அஞ்சும் அடக்கி அங்கே ஆகாய மந்திரமும் ஆனானாகும் கறுத்தானாம் காலனைக் காலால் வீழக் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே. ..... (11) ஆலய முகவரி : அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோவில், திருக்கருகாவூர், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், PIN - 614 302. "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"