எனக்குக் குறைவில்லையே.....
KingdomToRejoice
0:00 / 0:00
எனக்குக் குறைவில்லையே.....
138 просмотров · 1 месяц назад
KingdomToRejoice
45 подписчиков
138 просмотров · 1 месяц назад
குறைவில்லையே... எனக்குக் குறைவில்லையே...
குறைவெல்லாம் தீர்ப்பவர் இருக்க... குறைவில்லையே...
அவர் என்னோடு இருப்பதினால்... குறைவில்லையே...
அவர் என்னோடு இருப்பதினால்... பயமில்லையே...
அவர் மேய்ப்பராய் இருப்பதினால்... எதற்கும் கவலையில்லையே...
1)
வழியில்லாத இடத்தில் வழி செய்பவர் இருக்க...
எனக்குக் குறைவில்லையே...
உலர்ந்த நிலத்தில் நீரைத் தருபவர் இருக்க...
எனக்குக் குறைவில்லையே...
அவர் என்னோடு இருப்பதினால்...
எனக்குக் குறைவில்லையே...
அவர் என்னோடு இருப்பதினால்...
எனக்குப் பயமில்லையே...
2)
கடலைப் பிளந்து பாதை அமைத்தவர் இருக்க...
எனக்குக் குறைவில்லையே...
வார்த்தையால் மதில்களை இடிந்து விழச் செய்தவர் இருக்க...
எனக்குக் குறைவில்லையே...
அவர் என்னோடு இருப்பதினால்...
எனக்குக் குறைவில்லையே...
அவர் என்னோடு இருப்பதினால்...
எனக்குப் பயமில்லையே...
3)
சிறிய கல்லால் பலவீனனுக்கு ஜெயம் தந்தவர் இருக்க...
எனக்குக் குறைவில்லையே...
சிங்கக் குகையில் சிங்கங்களின் வாயை அடைத்தவர் இருக்க...
எனக்குக் குறைவில்லையே...
அவர் என்னோடு இருப்பதினால்...
எனக்குக் குறைவில்லையே...
அவர் என்னோடு இருப்பதினால்...
எனக்குப் பயமில்லையே...
4)
எரியும் நெருப்பிலே உடனிருந்தவர் இருக்க...
எனக்குக் குறைவில்லையே...
ஐந்து அப்பமும் இரண்டு மீன்களாலும் ஆயிரங்களைப் போஷித்தவர் இருக்க...
எனக்குக் குறைவில்லையே...
அவர் என்னோடு இருப்பதினால்...
எனக்குக் குறைவில்லையே...
அவர் என்னோடு இருப்பதினால்...
எனக்குப் பயமில்லையே...
5)
தண்ணீரைத் திராட்சரசமாக மாற்றியவர் இருக்க...
எனக்குக் குறைவில்லையே...
மரித்த லாசருவை உயிரோடு எழுப்பியவர் இருக்க...
எனக்குக் குறைவில்லையே...
அவர் என்னோடு இருப்பதினால்...
எனக்குக் குறைவில்லையே...
அவர் என்னோடு இருப்பதினால்...
எனக்குப் பயமில்லையே...
6)
குருடனின் கண்களைத் திறந்தவர் இருக்க...
எனக்குக் குறைவில்லையே...
உயிர்த்தெழுந்து மரணத்தை வென்றவர் இருக்க...
எனக்குக் குறைவில்லையே...
அவர் என்னோடு இருப்பதினால்...
எனக்குக் குறைவில்லையே...
அவர் என்னோடு இருப்பதினால்...
எனக்குப் பயமில்லையே...