சரவணைப் பெண்ணே வா… வா !
Kayts-தீவகம் : ஊர்காவற்றுறை _சரவணை_சின்னமடுவடி
0:00 / 0:00
சரவணைப் பெண்ணே வா… வா !
3 просмотра · 2 мес. назад
Kayts-தீவகம் : ஊர்காவற்றுறை _சரவணை_சின்னமடுவடி
5 подписчиков
3 просмотра · 2 мес. назад
விடிவெள்ளி விளக்கும் நேரம்
வானம் தாங்கும் மஞ்சள் நிலா
கவியெழுதும் என் நெஞ்சமதே
காதலெனும் நீரோர் நதி
அசைந்து பாயும் ஆச்சரியம் நீ
அழகி ராணி என் வான்மதி நீ
மேகம் நான், உனைத் தழுவ…
சரவணைப் பெண்ணே…வா வா…
மதி அழகே என் வான் நிலவே
தங்க நிறத் தமிழ் அழகே
நீ குழந்தை அன்று இனி
என் தாலாட்டு தமிழ் மடியே
மங்கையாய் உனை காண்கிறேன்
இன்று இளம்பெண்ணாய் மலர்கிறாய்
ஒற்றைக் குறி திருநீற்றுக் கண்ணே
அரிய ஒளியே செவ் இதழே
அமுதம் ஊறும் மஞ்சள் நிலவே
நெஞ்சம் கொண்ட என் நிலா பெண்ணே
நீ தேவதையோ தாரகையோ
உன் விழியில் நான் தொலைந்தேன்
அன்று கனவில் உனை கண்டேன்
விடிவெள்ளி விளக்கும் நேரம்
வானம் தாங்கும் மஞ்சள் நிலா
கவியெழுதும் என் நெஞ்சமதே
காதலெனும் நீரோர் நதி
அற்புதம் நீ அழகு ராணி
பாய்ந்துப் பாயும் என் வான்மதி நீ
மேகம் நான், உனைத் தழுவ…
சரவணைப் பெண்ணே வா…வா…
வெற்று ஆசை வீண் எல்லாம்
வண்டுப் போல பறக்கும் தினம்
வாழ்வு உன் முகத்தில்
மலர்ந்து நிற்கும் என் பெண்ணே
வா வான்மதியே நாமும் உலாச் செல்வோமே
உயிர் குளிக்கும் இன்பம் தரும்
எம் இதயம் இன்று ஆடி மகிழும்
ஊர் முழுதும் திசை மாறும்
உயிர் வாழ்ந்த இடம் தோறும்
உன் நிழல் தான் என் ராணி மகளே
பெண்ணே பேரழகே என் வான்மதி
தேன் கலந்த தென்றல் போல
தெம்மாங்காய் கவி மதி நீ
ஈழ மண்ணின் நெஞ்சில் நீ
வெடித்துச் சிதறும் பஞ்சாய்
திசையெல்லாம் பறந்த உறவு
தென்றல் வீசும் நிலா இரவில்
உன் முகமும் ஒளி சேர்ந்து
மென்மை கொஞ்சும் மஞ்சள் வான்மதியே…
மதி அழகே என் வான் நிலவே
தங்க நிறத் தமிழ் அழகே
நீ குழந்தை அன்று இனி
என் தாலாட்டு தமிழ் மடியே
மங்கையாய் உனை காண்கிறேன்
இன்று இளம்பெண்ணாய் மலர்கிறாய்
விடிவெள்ளி விளக்கும் நேரம்
வானம் தாங்கும் மஞ்சள் நிலா
கவியெழுதும் என் நெஞ்சமதே
காதலெனும் நீரோர் நதி
அசைந்து பாயும் ஆச்சரியம் நீ
அழகி ராணி என் வான்மதி நீ
மேகம் நான், உனைத் தழுவ…
சரவணைப் பெண்ணே வா… வா…
நிலா பெண்ணே என் வன் மதியே
சாட்டிக் கடல் ஓரப் பாதை
சின்னவளே என் கை பிடி நீ
காதல் கொண்டு மயங்கிவிட்டேன்
நிலா பொழியும் என் நெஞ்சமே
இனிய மதியே தேன் சாறே
காதல் கொண்ட எனைக் கண்டு
அன்பு சொல் நீ என் தாயே
பெரியவளே நீ மாங்கனி
செல்வம் தரும் முத்துப் பல்
செம்மங்கை கூந்தல் நீண்டது
காற்றில் ஆடும் போது நான்
வானில் ஏற்றிய பட்டம் பறக்க
நூல் ஏந்திய கையை விட்டேன்
உனை நினைத்து…
பார் பெண்ணே என் நிலா வான்மதியே
கம்பராயக்குளக் கரையில்
தவம் செய்த வெண் கொக்கு நான்
உன் அருகே நிற்கும் இந்நேரம்
என் இராணி நீ மகா ராணி
மகளே நீ வான் நதியே
உலர்ந்த நான் தரை போலே
பசுமை பொழியும் உன் மனம்
இதயம் முழுதும் நனைக்க
விடிவெள்ளி விளக்கும் நேரம்
வானம் தாங்கும் மஞ்சள் நிலா
கவியெழுதும் என் நெஞ்சமதே
காதலெனும் நீரோர் நதி
அசைந்து பாயும் ஆச்சரியம் நீ
அழகி ராணி என் மதியே நீ
மேகம் நான், உனைத் தழுவ…
சரவணைப் பெண்ணே வா… வா…