கொட்டும் மழையுள் முல்லை அவிழும் சரவணையில்…
Kayts-தீவகம் : ஊர்காவற்றுறை _சரவணை_சின்னமடுவடி
0:00 / 0:00
கொட்டும் மழையுள் முல்லை அவிழும் சரவணையில்…
6 просмотров · 12 дней назад
Kayts-தீவகம் : ஊர்காவற்றுறை _சரவணை_சின்னமடுவடி
5 подписчиков
6 просмотров · 12 дней назад
கொட்டும் மழையுள்
முல்லை அவிழும்
கொஞ்சுந் தமிழில்
குலமகள் கெஞ்சல்
நாசியில் நுழையும்
நறுமணம் கமிழும் தென்றல்
சரவணை எங்கும் நந்தவனம்
பூத்துக் குலங்கும்
மண் மகள் துலங்கும்
மனதுக்கேற்ற மத்தாப்பு மின்னல்
சின்னமடுக் கணக்கர் வளவு
காணாமற் போன அறைவீடு
செவியோரம் புளியமரக்குயிலோசை
சிந்தையில் ஏனோ தவிப்பு …
தக்கித் தாம் தீம் தோம்
திசையெல்லாம் கொடியிடையாள் கூட்டம்
நெற்றித் தொப்பி
நிலவைக் கொல்லும் பொட்டு
கொட்டும் மழையுள்
முல்லை அவிழும்
கொஞ்சுந் தமிழில்
குலமகள் கெஞ்சல்
இரட்டைப் பின்னல்
நீள் கூந்தல்
குட்டைப் பாவாடை
கொஞ்சும் புன்னகை
குவி இதழாள்
இதயங் கொன்றாள்
கருங் குடையுள்
நிலவாய் மறைந்தாள்
சின்னமடுப் பள்ளியிலே
கண்டிருப்பீர் கலை அழகு
காலம் எல்லாம்
கதையளக்கும்
காதல் கொண்ட மனது
புளியங்கூடற் சந்தியில்
இளந்தென்றல் வீசும்
தேனீர் அருந்தும்
தென்றற் பெண்ணே
சுந்தரம் , கனசபை ,
இந்துமதி கடைகள் எங்கே…?
கறையான் புற்றில்
காளான் முளைக்கும்
சிதம்பரியார் சயிக்கிள் கடை
மனதுக்கேற்ற மத்தாப்பு
சின்னமடுக் கணக்கர் வளவு
காணாமற் போன அறைவீடு ,
சயிக்கிள் கடை…
செவியோரம் குயிலோசை
புளிய மரத்தில் காகமும் குயிலும்
ஆலமரத்தில் தவழ்ந்தன புறாக்கள்
சிந்தையில் ஏனோ இந்தத் தவிப்பு …
முல்லைக் கொடியே
முந்திய வாழ்வு எங்கே
முதியோர் முற்றுமும் வாழ்வும்
முடிந்த தடம் எங்கே…?
அள்ளிய கிணறும் பாழ்
அவிழ்ந்த மாமரமொட்டு
மாங்காய் மலரும்
மழையினில் குலையும்
பிஞ்சு மாங்காய்
சின்னமடுமாதா
குட்டிப் பெண்ணே
கிழன்றிப் போனாய்
குலமகள் என்றும் குடிமகள் நீயே…!
தக்கித் தாம் தீம் தோம்
திசையெல்லாம் கொடியிடையாள் கூட்டம்
நெற்றித் தொப்பி
நிலவைக் கொல்லும் பொட்டு
கொட்டும் மழையுள்
முல்லை அவிழும்
கொஞ்சுந் தமிழில்
குலமகள் கெஞ்சல்
நாசியில் நுழையும்
நறுமணம் கமிழும் தென்றல்
சரவணை எங்கும் நந்தவனம்
பூத்துக் குலங்கும்
மண் மகள் துலங்கும்