பொங்கிப் பெருகும் உள்ள மகிழ்வினில் | Pongip Perugum Ulla Mahizh | Communion Song | Fr. Joseph Stalin
Fr. Joseph Stalin
0:00 / 0:00
பொங்கிப் பெருகும் உள்ள மகிழ்வினில் | Pongip Perugum Ulla Mahizh | Communion Song | Fr. Joseph Stalin
11 823 просмотра · 1 мес. назад
Fr. Joseph Stalin
9,21 тыс. подписчиков
11 823 просмотра · 1 мес. назад
Lyrics & Music : Fr. Joseph Stalin M.
Music Director : Mr. Kilingston E.
Singer : Fr. Joseph Stalin M.
Video Making : Mr. M. Rejin BSc, DFTech
Producer : Fr. Joseph Arul Stalin
for SOLL Veliyedu
Contact : 9443 276 296
பொங்கிப் பெருகும் உள்ள மகிழ்வினில்
புதிய வாழ்வுப் புலர்ந்தது
மங்கலம் தங்கிட இறைமகன் வரும்
பந்தியிலே இன்பம் நிறைந்தது
இயேசு வருகின்றார்
கறைகள் குறைகள் கவலைப் போக்க
இயேசு வருகின்றார்
வளமை இனிமை வாழ்வில் சேர்க்க
உணவில் வருகின்றார் (2)
உழைப்பதன் மாண்பினைப் போற்றியே - ஓர்
உடலெடுத்து மனிதனாக வருகின்றார்
களைப்பினைச் சோர்வினைப் போக்கிட - தன்
உடலையே உணவென தருகின்றார் (2)
உழைப்பிலும் உண்ணும் உணவிலும்
இறைவன் தெரிகின்றார் (2) - திரு
விருந்தில் கலந்து உறவில் மகிழ்ந்து
அன்பைக் கொண்டாடுவோம்
கோதுமை அப்பமே திருவுடல் - கனி
திராட்சையே இயேசுவின் உதிரமாய்
நிலத்தினில் வளைந்த நல் கனிகளே - இறை
அருளினை வழங்கிடும் கொடைகளாய் (2)
உணவென வரும் இறைவனை
உள்ளம் வரவேற்போம் (2) - இந்த
மண்ணும் உயிர்களும் கண்ணின் மணியென
என்றும் கொண்டாடுவோம்.