Перейти к содержимому

Karuvile Kandavarey l Christian song l New song l Lyrics Philip Kumar l Music Eva.A.Joshua Victor

glory of jesus prayer ministries

0:00 / 0:00

Karuvile Kandavarey l Christian song l New song l Lyrics Philip Kumar l Music Eva.A.Joshua Victor

1 970 просмотров · 5 дн. назад
glory of jesus prayer ministries
933 подписчика
1 970 просмотров · 5 дн. назад
ஆண்டவரும் இரட்சகரமாய் இருக்கிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்கள் யாவரையும் இந்த பாடல் மூலமாக வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன். கர்த்தர் தொடர்ந்து புதிய புதிய பாடல்களை கொடுத்துக் கொண்டிருப்பதினால் கர்த்தரை நான் மிகவும் துதிக்கிறேன். குறிப்பாக கருவிலே கண்டவரே என்ற இந்த பாடல் நிச்சயமாகவே உங்கள் ஒவ்வொருவருடைய உள்ளத்தையும் தேற்றும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. எனது தாய் தந்தையருக்கு நான் ஆறாவது பிள்ளை ஐந்து பிள்ளைக்கு பிறகு என்னை கருவிலே அளித்து விடலாம் என்று எண்ணிய நாட்களில் கர்த்தருடைய கண்கள் நான் கருவுற்றிருக்கும் போது என்னை கண்டது. கருவிலே கண்டவர் என்னை காப்பாற்றி ஒரு ஒரு நாளும் கைவிடாமல் நடத்திக் கொண்டு வந்தார். வாழ்க்கையில் வந்த போராட்டங்கள், சூழ்நிலைகள் வித்தியாசமாக இருந்ததினால் அநேக முறை இந்த உலகத்தில் வாழ எனக்கு தகுதி இல்லை என்று சொல்லி தற்கொலைக்கு நேராக ஓடினேன். ஆனாலும் கருவிலே கண்டவர் என்னை கரம் பிடித்து தூக்கினார். ஆசிர்வாதமான வாழ்க்கையை தந்தார் மனைவி, பிள்ளைகளை தந்தார், நல்ல ஊழியத்தை தந்தார், நல்ல விசுவாசிகளை தந்தார் ,அனேக பாடல்களை எழுத அவரை துதிக்க கிருபை கொடுத்தார். அதற்காக கர்த்தரை துதிக்கிறேன். விசேஷமாக இந்தப் பாடல் என்னுடைய வாழ்க்கையே பாடலாக எழுத ஆண்டவர் கிருபை செய்தார். கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்தப் பாடல் சிறந்த முறையில் வெளிவர உதவியாய் இருந்த இசையமைத்த நல்ல முறையில் வீடியோ பதிவு செய்து கொடுத்த இன்னும் இந்தப் பாடல் ஊழியத்திற்கு என்று கொடுத்த, உழைத்த ஒவ்வொருவருக்கும் இந்த சாட்சியின் மூலமாக நன்றி சொல்கிறேன் கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென். கருவிலே கண்டவரே பெயர் சொல்லி அழைத்தவரே மண்ணான எனக்கு வாழ்வு தந்தவரே (2) என் தங்கமே என் செல்லமே உம்ம தொட்டு பார்க்க எனக்கு ஆசையே 1. நாதியத்து கிடந்த என்ன ராசா நீர் தேடிவந்தீர் (2) பாவியாக வாழ்ந்த என்ன பாசத்தால அனைத்துக் கொண்டீர். (2) - தங்கமே என் செல்லமே 2. உம்மை விட்டு தூரம் போனேன் ராசா தேடி வந்தீர் (2) உசுர கொடுத்து என்ன உன் பிள்ளையாக்கினீரே (2) - தங்கமே என் செல்லமே 3. அழிவுக்கு நேராக என் வாழ்வை தேடி போனேன் (2) ஜீவ பாதை காட்டி என் வாழ்வை மாற்றினீரே (2) - தங்கமே என் செல்லமே.