Maravaar Yesu Maravaar | மறவார் இயேசு மறவார் | Tamil Christian Song Cover | David B Kens
Kanmalayin Jeeva Ootru
0:00 / 0:00
Maravaar Yesu Maravaar | மறவார் இயேசு மறவார் | Tamil Christian Song Cover | David B Kens
71 158 просмотров · 3 месяца назад
Kanmalayin Jeeva Ootru
5,58 тыс. подписчиков
71 158 просмотров · 3 месяца назад
Maravaar Yesu Maravaar | மறவார் இயேசு மறவார்
Lyrics written by: Rev. Bishop Gnanapragasam
Lyrics:
மறவார் இயேசு மறவார் – உன்னை
ஒரு இமைப் பொழுதிலும்
மறவார் இயேசு மறவார் – உன்னை
உருவாக்கிய இயேசு மறவார்
அழைத்தவர் உன்னை மறவார்
அபிஷேகம் செய்தவர் மறவார்
மனிதனின் அன்பு நிலை மாறினாலும்
மகிமையின் தேவன் உன்னை மறவார்
தரிசனம் தந்தவர் மறவார்
தாங்கியே நடத்திட மறவார் – எப்பக்கம்
நெருக்கங்கள் உன்னை சூழ்ந்திட்டாலும்
எலியாவின் தேவன் உன்னை மறவார்
வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
வழிகாட்டி நடத்திட மறவார்
வானமும் பூமியும் நிலை மாறினாலும்
வார்த்தையை நிறைவேற்ற மறவார் – தம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் டேவிட் பி கென்ஸ். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கர்த்தருடைய பணியில் ஊழியம் செய்து வருகிறேன். ஜீவ ஊற்று என்ற இந்த youtube சேனல் கடந்த 2018 ஆண்டில் தொடங்கப்பட்டு இன்றுவரை பாடல்களை மையமாக வைத்து குடும்பமாக இவற்றில் பணியாற்றி கர்த்தருடைய ஊழியத்தை நிறைவேற்றி வருகிறோம்.
எங்களுடைய தரிசனம் நாம் மறந்து போன பழைய ஆவிக்குரிய பாடல்களை எப்படியாவது புதிய விகிதத்திலுள்ள டெக்னாலிஜியை பயன்படுத்தி பழைய பாடல்களுக்கு ஒரு புது ஜீவன் கொடுக்கப்பட்டு தரம் குறையவிடாமல் பாடி, புதிய பாடல்களைப் போல அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே. மேலும் நாம் எல்லோரும் அதை வீடுகளிலும், சபைகளிலும் ஆராதனைகளிலும் பாட வேண்டும் .
இதோடுக்கூட கர்த்தர் கொடுக்கின்ற புதிய பாடல்களும் அவ்வப்போது பதிவுசெய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் இயேசு கிறிஸ்துவின் அன்பை உலக அனைத்து சொந்தங்களுக்கும் பறைசாற்றப்பட வேண்டும். இசையும், ராகங்களும் மொழிகளைக் கடந்தது. எனவே இப்படிப்பட்ட பாடல்கள் நிச்சயமாய் அனேக மக்களுக்கு ஆசீர்வாதமாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
உங்களுக்கு இந்த சேனல் பயனுள்ளது என்று அறிந்தால் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். கர்த்தர் தாமே உங்களையும் உங்களின் குடும்பத்தின் பிள்ளைகளையும் சங்கீதம் 128 ன் படி ஆசீர்வதிப்பாராக.
அனேக பழைய பாடல்களின் பாடல் ஆசிரியர்களின் பெயர்கள் அறியப்படாத சூழ்நிலையில் பெயர் குறிப்பிடப்படாமல் “Traditional Song cover” என்று மாத்திரமே பதிவுசெய்யப்படுகிறது. இதை தவறாக புரிந்துகொள்ளாமல் உங்களுக்கு ஆக்கியோன் பெயர் அறிந்தால் தெரியப்படுத்தவும். மேலும் இந்தப் பழைய பாடல்களின் பதிவு குறித்து அதன் ஆகியோன் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை என்றாலும் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். நாங்கள் அதை உடனே இத்தளத்திலிருந்து அவற்றை நீக்கி விடுகிறோம் என்பதை இக்கடிதத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம்.
இதை நாங்கள் மிகுந்த ஜெபத்தோடும், கவனத்தோடும் பல நாட்களின் உழைப்போடும் பதிவு செய்து வெளிக்கொண்டு வருகிறோம். இத்தளத்திற்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உங்களால் இயன்றவர்களுக்கு இந்த பாடல்களை பகிர்ந்து உதவுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள். எங்களால் இயன்ற அளவிற்கு அதை சரி செய்து கொள்ள முயல்கிறோம்.
பின் நாட்களில் (சில மாதங்களுக்கு பின்) “ஒரு வார்த்தை ஓர் அற்புதம்” என்ற தலைப்பில் சில நமிட செய்தி பதிவிட உள்ளோம். இவை அனேக மக்களுக்கு இன்னும் பிரயோஜனமாய் இருக்குமென்று நாங்கள் எண்ணுகிறோம். இதற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.
காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார். மாற்கு 1:15