Перейти к содержимому

Thalattu 7 - Kaduvetti thallattu ||Chettinadu Thalattu || Visalakshi Palaniappan || Visalakshi achi

Nagarathar Aachi's World

0:00 / 0:00

Thalattu 7 - Kaduvetti thallattu ||Chettinadu Thalattu || Visalakshi Palaniappan || Visalakshi achi

26 897 просмотров · 6 лет назад
Nagarathar Aachi's World
18 тыс. подписчиков
26 897 просмотров · 6 лет назад
#poornasworldcollection #traditionalthalattu #thalattu #kaduvettithalattu #aachisworld #thallattu #nagaratharaachisworld Hello Friends Vanakkam n welcome back to our Poorna's 🌍 Today's video about Traditional chettinad thalattu by Mrs. Visalakshi Palaniappan, Trichy Song : Kaduvetti naadaki காடு வெட்டி நாடாக்கி கள்ளர் எல்லாம் உள்ளமர்த்தி நாடு பெற்று வாராக ராசமுடி அம்மாங்க வெற்றி பெற்றுவாராக வீரமுடி அம்மாங்க காட்சி பெற்று வாராக கருணமுடி அம்மாங்க அம்மாங்க எல்லையிலே என்ன வச்சா தோப்பாகும் வாழை பயிராகும் வச்சதெல்லாம் தோப்பாகும் தென்னை பயிராகும் சேர்த்ததெல்லாம் தோப்பாகும் இஞ்சி பயிராகும் எலுமிச்சை தோப்பாகும் ஜாதிக்காய் காய்க்கும் தாய்மாமர் எல்லையிலே மாசக்காய் காய்க்கும் மகராசர் எல்லையிலே கற்பகமும் தேடி கனிந்து வரும்போது உன்னரிய அம்மான்மார் என்ன கொண்டு வந்தாக கொத்துவிடா நெத்தும் கோதுபடா மாங்கனியும் பருவச்சுளையும் பக்குவத்து மாங்கனியும் அக்கரை சர்க்கரையும் அதிமதுரத் தென்னை வட்டும் காய்ச்சின பாலும் கற்கண்டும் செந்தேனும் ஏலம் கிராம்பும் இளம் கொடிக்கால் வெற்றிலையும் ஜாதி களிப்பாக்கும் சங்கு வெள்ளைச் சுண்ணாம்பும் அத்தனையும் கொண்டு அறிய வந்தார் அம்மான்மார் பழவர்க்கம் கொண்டு பார்க்க வந்தார் தாய் மாமர் கனி வர்க்கம் கொண்டு காண வந்தார் தாய்மாமர் போட்டு விளையாட பொன்னால தாமரப்பூ வச்சு விளையாட வைரத்தால் சிண்டுமணி கொண்டு வந்து தந்தார்கள் கோதைக்கிளி அம்மாங்க சங்கினால் பால் கொடுத்தால் சந்தன வாய் நோகுமுன்னு கடைக்கு கடை பார்த்து கல் பதித்த சங்கெடுத்து சுத்தி சிவப்பெழுதி தூருக்கோ பச்சைகட்டி வாய்க்கு வைரம் வைத்து வாங்கி வந்தார் தாய்மாமர் அத்தை மடிமேலே அம்மாங்க தோள்மேலே மாமி மடிமேலே மாமாக்கள் தோள்மேலே பாட்டி மடிமேலே பாட்டையா தோள்மேலே வச்சு விளையாடும் நவமணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுறங்கு கான மயிலுறங்கு பொன்னே உறங்கு எங்கள் பூச்சரமே கண்ணுறங்கு மயிலே உறங்கு எங்கள் மரகதமே கண்ணுறங்கு குயிலே உறங்கு எங்கள் குஞ்சரமே கண்ணுறங்கு #tamillullaby #lullaby #visalakshiachi #aachithalattu #visalakshipalaniappan #shanmuganathapuramachi #chettinaduthalattu #thalattuachi #nagaratharthalattu #nagarathar #traditionalthalattu #chettinadthalattu hope u all enjoy watch till end like n share with ur family n friends thanks for the support love u all