Перейти к содержимому

திருவிசைப்பா | தஞ்சை இராசராசேச்சரம் | உலகெலாம் தொழவந்து எழுகதிர்ப் பருதி | கருவூர்த்தேவர்

Shaivamum Thamizhum

0:00 / 0:00

திருவிசைப்பா | தஞ்சை இராசராசேச்சரம் | உலகெலாம் தொழவந்து எழுகதிர்ப் பருதி | கருவூர்த்தேவர்

113 просмотров · 2 мес. назад
Shaivamum Thamizhum
3,47 тыс. подписчиков
113 просмотров · 2 мес. назад
09.016 திருவிசைப்பா | தஞ்சை இராசராசேச்சரம் | உலகெலாம் தொழவந்து எழுகதிர்ப் பருதி | கருவூர்த்தேவர் | திரு கரூர் சுவாமிநாதன் #KaruvurDevar | #Thiruvisaippa | #Thanjavur | #BrihadeeswararTemple | #ShivamumThamizhum இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பிரகதீஸ்வரர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிருகந்நாயகி கருவூர்த்தேவர் அருளிச்செய்த தஞ்சை இராசராசேச்சரம் திருவிசைப்பா 00:11 உலகெலாம் தொழவந்து எழுகதிர்ப் பருதி ஒன்று நூறாயிர கோடி அலகெலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ அங்ஙனே அழகிதோ அரணம் பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம் பருவரை ஞாங்கர்வெண் திங்கள் இலைகுலாம் பதணத்து இஞ்சிசூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே. ..... (01) 02:48 நெற்றியிற் கண் என் கண்ணில் நின்று அகலா நெஞ்சினில் அஞ்சிலம்பு அலைக்கும் பொற்றிருவடி என்குடி முழுது ஆளப் புகுந்தன போந்தன இல்லை மற்று எனக்கு உறவேன் மறிதிரை வடவாற்றிடு புனல் மதகில் வாழ் முதலை ஏற்றிநீர்க் கிடங்கின் இஞ்சிசூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே. ..... (02) 04:58 சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய வெண்ணிலா விரிதரு தரளக் குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும் குறிப்பெனோ கோங்கிணர் அனைய குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந்து உக்க செஞ்சுடர்ப்படு குவையோங்கு இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே. ..... (03) 06:10 வாழியம் போதத்து அருகுபாய் விடையம் வரிசையின் விளக்கலின் அடுத்த சூழலம் பளிங்கின் பாசலர் ஆதிச் சுடர்விடு மண்டலம் பொலியக் காழகில் கமழும் மாளிகை மகளிர் கங்குல்வாய் அங்குலி கெழும யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே. ..... (04) 07:41 எவரும் மாமறைகள் எவையும் வானவர்கள் ஈட்டமும் தாள் திருக்கமலத்து அவரும் மாலவனும் அறிவரும் பெருமை அடல் அழல் உமிழ் தழல் பிழம்பர் உவரிமா கடலின் ஒலிசெய் மாமறுகில் உறுகளிற்று அரசினது ஈட்டம் இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே. ..... (05) 08:45 அருளுமாறு அருளி ஆளுமாறு ஆள அடிகள்தம் அழகிய விழியும் குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ தரளவான் குன்றில் தண்நிலா ஒளியும் தருகுவால் பெருகுவான் தெருவில் இருளெலாம் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே. ..... (06) 09:44 தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின் தளிர் இறப்பு இலை உதிர்வு என்றால் நினைப்பருந் தம்பால் சேறல் இன்றேனும் நெஞ்சிடிந்து உருகுவது என்னோ சுனைப்பெருங் கலங்கல் பொய்கையங் கழுநீர்ச் சூழல் மாளிகைசுடர் வீசும் எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே. ..... (07) 10:56 பன் நெடுங்காலம் பணிசெய்து பழையோர் தாம்பலர் ஏம்பலித்து இருக்க என் நெடுங்கோயில் நெஞ்சு வீற்றிருந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் மின் நெடும் புருவத்து இளமயில் அனையார் விலங்கல்செய் நாடக சாலை இன் நடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே. ..... (08) 12:54 மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து வஞ்சகர் நெஞ்சகத்து ஒளிப்பார் அங்கழல் சுடராம் அவர்க்கிள வேனல் அலர் கதிர் அனையர் வாழியரோ பொங்கெழில் திருநீறு அழிபொசி வனப்பில் புனல் துளும்பு அவிர்சடை மொழுப்பர் எங்களுக்கு இனியர் இஞ்சிசூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே. ..... (09) 13:56 தனியர் எத்தனை ஓராயிர வருமாம் தன்மையர் என் வயத்தினராம் கனியர் அத்தரு தீங்கரும்பர் வெண்புரிநூற் கட்டியர் அட்ட ஆரமிர்தர் புனிதர் பொற்கழலர் புரிசடா மகுடர் புண்ணியர் பொய்யிலா மெய்யர்க்கு இனியர் எத்தனையும் இஞ்சிசூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே. ..... (10) 15:13 சரள மந்தார சண்பக வகுள சந்தன நந்தன வனத்தின் இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவரை அருமருந்து அருந்தி அல்லல்தீர் கருவூர் அறைந்தசொல் மாலை ஈரைந்தின் பொருள் மருந்து உடையோர் சிவபதம் என்னும் பொன்நெடுங் குன்றுடையோரே. ..... (11) பதிகப் பலன் : தேவதாரு, மந்தாரம், சண்பகம், மகிழ், சந்தனம் என்ற மரங்கள் அடர்ந்த நந்தனவனத்தின் இருள் அடர்ந்த உச்சியை உடைய மதில்களால் சூழப்பட்ட இராசராசேச்சரத்து எம்பெருமானை, அரிய காயகற்பத்தை அருந்தி இறத்தலைப் பலகாலம் நீக்கி வைத்த கருவூர்த்தேவர் பாடிய சொல்மாலையாகிய இப்பத்துப்பாடல்களின் சொற்பொருளாகிய அமுதத்தை நுகர்ந்த அடியார்கள் சிவபதம் என்னும் பொன்மயமான நெடிய மலையைத் தம் உடைமையாகப் பெறுவர். குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"