Перейти к содержимому

ஆவியானவரே |Aaviyanavare |New Devotional song|Pastor suresh mdk

SHALOM SONGS

0:00 / 0:00

ஆவியானவரே |Aaviyanavare |New Devotional song|Pastor suresh mdk

9 512 просмотров · 6 дней назад
SHALOM SONGS
463 подписчика
9 512 просмотров · 6 дней назад
கர்ப்பவதியாயிருக்கிற ஒரு பெண், தன்னுள் ஒரு குழந்தை இருப்பதும், வளர்வதும், நெளிவதும் அறிவாள், எந்நேரமும் அந்த இன்ப உணர்வை அனுபவித்து சிலாகித்துக் கொண்டிருப்பாள். பிரசவித்தப் பிறகு, தான் இதுவரை கண்ணால் காணாமல், தனக்குள்ளேயே சுமந்து கொண்டிருந்த தன் குழந்தையை நேரில் கண்டு மிகவும் மகிழ்வாள். அதுபோல் தான் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும். தாங்கள் கண்ணாரக் காணாத தேவனை நெஞ்சுக்குள் சுமக்கிறோம். அவர் தான் எங்கள் ஆவியாகிய தேவன், ஆவியானவர்! மனந்திரும்பி, இயேசுவை விசுவாசித்து தன் சொந்த இரட்சகராக ஏற்று ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொருவருக்குள்ளும் அவர் வாசம் பண்ணுகிறார். அனுதினமும் அவரை ஆராதிப்பதினால் அவர் நமக்குள் அசைவாடுவதையும், பேசுவதையும் அனுபவிக்க முடியும்! ஆராதிப்போம்! அனுபவிப்போம்! இப்பாடலை 24/08/2026 அன்று தேவன் எனக்குத் தந்தார். Suno ai மூலம் இசை சேர்த்துள்ளேன். Royalty free videos and Google flow மூலம் நான் உருவாக்கிய வீடியோக்களை சேர்த்திருக்கிறேன்! எங்கள் இசை வழி ஊழியம் வளர ஜெபத்துடன் ஆதரியுங்கள், Like, share, commond, மற்றும் Subscribe செய்யுங்கள். அனைவருக்கும் நன்றி! தேவன் ஒருவருக்கே மகிமை! பாடல் வரிகள் : --------------- ஆவியானவரே ஆவியானவரே அனல்மூட்ட வேண்டும் ஆவியானவரே ஆவியானவரே ஆவியானவரே ஆதி நாட்கள் போலவே எரியச் செய்யுமே 1.அனலுமின்றி குளிருமின்றி . நான் வாழ்கிறேன் . எழும்பி நிற்க விரும்பினாலும் . பெலனின்றி விழுகிறேன் . திரும்பத் திரும்ப உலகிலே . கலந்து போகிறேன் . பக்தியற்ற வாழ்விலே கரைந்து . போகிறேன் 2. அறிதலின்றி புரிதலின்றி . நான் வாழ்கிறேன் . தேவ சித்தம் செய்திடாமல் . விலகிப் போகிறேன் . திரும்பத் திரும்ப உன் கையில் . உடைந்து போகிறேன் . தேவனே எனைத் தள்ளிடாமல் . உருவாக்குமே 3. அன்புமின்றி பண்புமின்றி . நான் வாழ்கிறேன் . கனிகளின்றி வரங்களின்றி . வெறுமையாகிறேன் . கனி கொடாத கொடிகள் என்று . வெட்டி விடாமல் . கனி மரமாக என்னை . மாற்றும் தேவனே. #ஆவியானவரே #aaviyanavare #new​ christiantamilsong #jesussongs​ #newtamilchristiansongs​ #christianmusic​ #tamilchristiansong2026​ #christianmusic2026​ #tamilchristianworship​ #christianworship​ #tamilworship​ #tamilchristiantrending​#latestsongs​ #tamilchristianmusic​ #tamilchristianyouthnetwork​ #tamilchristiancommunity​ #gospelsongstamil​ #gospeltamil​ #contemporaryworshipmusic​ #contemporarychristianmusic​ #churchmusic​ #shalomsongs​ #pastorsureshmdk​ #pastorsureshsongs​ #shalomsongs​ #tamilchristiansongs​ #jesussongstamil​ #newchristiandevotionalsong