Перейти к содержимому

கலித்தொகை காலமும் படைத்தோரும் குறித்த முன்னாய்வுகள் - பேராசிரியர் பெ.மாதையன் உரை | VETCHI MRJTS

வெட்சி

0:00 / 0:00

கலித்தொகை காலமும் படைத்தோரும் குறித்த முன்னாய்வுகள் - பேராசிரியர் பெ.மாதையன் உரை | VETCHI MRJTS

359 просмотров · 12 дней назад
வெட்சி
108 подписчиков
359 просмотров · 12 дней назад
வெட்சி : பல்துறைத் தமிழாய்விதழ், கல்விப்புலத்தில் ஆய்வுகளாக நிகழ்ந்த நூல்களின் மீதான உரையாடல் நிகழ்வினை, “கல்விப்புல முன்னாய்வுகளும் எதிர்கால ஆய்வுகளும்” எனும் பொருண்மையில் இணைய வழியாக ஒருங்கிணைக்கிறது. மாதந்தோறும் 1,3 ஆவது செவ்வாய்க்கிழமைகளில் ஆய்வறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு முன்னோடிகள் தங்கள் துறை சார்ந்த ஆய்வுகளின் போக்குகள் குறித்தும் 2,4 ஆவது செவ்வாய்க்கிழமைகளில் இளம் ஆய்வாளர்கள் தங்கள் துறை சார்ந்த ஆய்வுநூல் குறித்தும் உரையாடும் வண்ணம் நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வானது, முன்னாய்வுகளின் போக்குகளை அறிதலினூடாக ஆய்வு இடைவெளிகளைக் கண்டறிதல், பல்துறைப் பார்வைகளை முன்வைத்தல், சமகால ஆய்வுகளைச் செறிவாகச் செய்யப்பட வேண்டுமென்ற நோக்கங்களை முன்வைக்கிறது.தொடக்க நிகழ்வாக, சங்க இலக்கிய முன்னாய்வுகளின் போக்குகள் : மதிப்பிடுதலும் மேலாய்வுக் களன்களைக் கண்டறிதலும் - 1 கலித்தொகை காலமும் படைத்தோரும் குறித்த முன்னாய்வுகள் எனும் தலைப்பில் பேராசிரியர் பெ.மாதையன் ஆற்றிய உரை. வாய்மொழி மரபுகளை மிகுதியாக உள்வாங்கிய கலித்தொகையின் காலம் பற்றிய உரையாடல்கள் தமிழ் ஆய்வுச்சூழலில் பரவலாக நிகழ்ந்துள்ளன. கமில் சுவலபில், ச.வையாபுரிப்பிள்ளை, கே.என்.சிவராஜபிள்ளை, தெ.ஆண்டிப்பிள்ளை, ச.அகத்தியலிங்கம், சு.சக்திவேல், சி.வை.தா., மா.இராசமாணிக்கனார், பி.டி.சீனிவாச ஐயங்கார், த.இராஜேஸ்வரி ஆகியோரது ஆய்வுகளில் நிகழ்ந்த உரையாடல்களை அறிமுகம் செய்து, கலித்தொகையின் ஆசிரியர் ஒருவரா, பலரா, தொகுத்தவரே பாடினாரா? என்று நிகழ்ந்த உரையாசிரியர்கள், ஆய்வாளர்களின் உரையாடல்களையும் முன்வைக்கிறது. நூல் எழுதப்பட்ட காலம், தொகையாக்கக் காலம் மற்றும் நூல் ஆசிரியர், தொகுப்பாசிரியர் குறித்த ஆய்வுகளில் இன்னும் உள்ள சிக்கல்களை விரிவாகப் பேசி, குறிப்பாக, கல்வெட்டியல், தொல்லியல், மூலபாடவியல், பாடவேறுபாடு,உரைமரபு, மொழியியல் எனப் பல்துறைப் பார்வைகளுடன் மேலும் ஆய்வதற்குரிய தேவைகளையும் முன்வைக்கிறது பேரா.மாதையனின் உரை. 00:00 - அறிமுகம் 06:00 - உரை 51:18 - கேள்வி பதில்