Перейти к содержимому

சுப்ரமண்ய சுந்தரனே....

Vicky Audios

0:00 / 0:00

சுப்ரமண்ய சுந்தரனே....

13 просмотров · 3 нед. назад
Vicky Audios
3,86 тыс. подписчиков
13 просмотров · 3 нед. назад
Subramanya Sundharane.... Lyrics : Soori.Thangaraj பாடல் : சூரி.தங்கராஜ் #முருகன்பாடல் #ஆறுபடை #பழநிமலை #தண்டபாணி #திருச்செந்தூர் #சுவாமிமலை #பழமுதிர்சோலை #திருப்பரங்குன றம் #திருத்தணி சுப்ரமண்ய சுந்தரனே அருள்வாயப்பா- செந் தமிழ் தந்த செங்கதிரோன் நீதானப்பா சுப்ரமண்ய சுந்தரனே அருள்வாயப்பா- செந் தமிழ் தந்த செங்கதிரோன் நீதானப்பா அழகென்ற சொல்லுக்கு நீ தானப்பா- தினம் நான் வணங்க வழி காட்டும் கந்த வேலப்பா....முருகா அழகென்ற சொல்லுக்கு நீ தானப்பா- தினம் நான் வணங்க வழி காட்டும் கந்த வேலப்பா....முருகா சுப்ரமண்ய சுந்தரனே அருள்வாயப்பா- செந் தமிழ் தந்த செங்கதிரோன் நீதானப்பா மனதோடும் நினைவோடும் நிலையாகியே- என் வாழ்வோடு உறவான தண்டபாணியே மலையோடும் மயிலோடும் விளையாடியே- குறிஞ்சி வனம் போற்ற இறையான கதிர்வேலனே மனதோடும் நினைவோடும் நிலையாகியே- என் வாழ்வோடு உறவான தண்டபாணியே மலையோடும் மயிலோடும் விளையாடியே- குறிஞ்சி வனம் போற்ற இறையான கதிர்வேலனே பொன்னோடு புகழ் சேர அருள் காட்டியே- நல்ல பூலோக அற வாழ்வு அருவாயப்பா எண்ணோடு எழுத்தாக அறிவூட்டியே-மன கண்ணோடு வழி காட்டு என் சுப்பையா...முருகா பொன்னோடு புகழ் சேர அருள் காட்டியே- நல்ல பூலோக அற வாழ்வு அருவாயப்பா எண்ணோடு எழுத்தாக அறிவூட்டியே-மன கண்ணோடு வழி காட்டு என் சுப்பையா...முருகா சுப்ரமண்ய சுந்தரனே அருள்வாயப்பா- செந் தமிழ் தந்த செங்கதிரோன் நீதானப்பா நற்குணத்தோட குலமாக நீயாகியே- தவ வளத்தோடு வரம் தாரும் தன பாலனே தேவகணத்தோடு களம் கண்டு நலம் கூட்டியே- இந்த நானில உயிர் காக்கும் அழகேசனே நற்குணத்தோடு குலமாக நீயாகியே- தவ வளத்தோடு வரம் தாரும் தன பாலனே தேவகணத்தோடு களம் கண்டு நலம் கூட்டியே- இந்த நானில உயிர் காக்கும் அழகேசனே ஔவை(த்) தமிழோடு அழகாக விளையாடவே- நாவல் பழத்தோடு அருள் பழமான ஞானப்பனே உறவோடு தென் நாடு நீ வாழவே- மாங் கனியோடு கதை நின்ற பழம்நீயப்பா...முருகா ஔவை(த்) தழிழோடு அழகாக விளையாடவே- நாவல் பழத்தோடு அருள் பழமான ஞானப்பனே உறவோடு தென் நாடு நீ வாழவே- மாங் கனியோடு கதை நின்ற பழம்நீயப்பா...முருகா சுப்ரமண்ய சுந்தரனே அருள்வாயப்பா- செந் தமிழ் தந்த செங்கதிரோன் நீதானப்பா சுப்ரமண்ய சுந்தரனே அருள்வாயப்பா- செந் தமிழ் தந்த செங்கதிரோன் நீ..தா..னப்பா.