Перейти к содержимому

பாஸ்மதி அரிசி குழையாமல் உதிரியா சிக்கன் பிரியாணி | Easy Chicken Biryani in Tamil

சுவைச்சாரல்

0:00 / 0:00

பாஸ்மதி அரிசி குழையாமல் உதிரியா சிக்கன் பிரியாணி | Easy Chicken Biryani in Tamil

585 просмотров · 6 дней назад
சுவைச்சாரல்
14 подписчиков
585 просмотров · 6 дней назад
பாஸ்மதி அரிசி குழையாமல் உதிரியா வீட்டிலேயே சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம். 1 கப் பாஸ்மதி அரிசி, 250 கிராம் சிக்கன் மற்றும் வீட்டில் இருக்கும் மசாலாக்களைக் கொண்டு எளிமையாகச் செய்யலாம். 🍗🍚 🥣 தேவையான பொருட்கள் • பாஸ்மதி அரிசி – 1 கப் (30 நிமிடம் ஊறவைக்கவும்) • சிக்கன் – 250 கிராம் • தயிர் – ¼ கப் • உப்பு – தேவையான அளவு • மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன் • கரம் மசாலா – 1 டீஸ்பூன் • பிரியாணி மசாலா – 1 டீஸ்பூன் • மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன் அல்லது காரத்திற்கு ஏற்ப • நெய் – 1 டேபிள்ஸ்பூன்; இறுதியில் சிறிதளவு • சமையல் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன் • பட்டை – 1 துண்டு • ஏலக்காய் – 3 • கிராம்பு – 2 • பிரியாணி இலை – 2 • வெங்காயம் – 1 • பச்சை மிளகாய் – காரத்திற்கு ஏற்ப • தக்காளி – 1 • இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன் • தண்ணீர் – 2 கப் • புதினா, கொத்தமல்லி தழை – விருப்பத்திற்கு அரிசியை 30 நிமிடம் ஊறவைக்கவும். சிக்கனைத் தயிர் மற்றும் மசாலாக்களுடன் கலந்து 30 நிமிடம் ஊறவைக்கவும். தாளிப்பு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின் சிக்கனைப் பாதியளவு வேகவைக்கவும். அரிசி, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் அரிசியும் சிக்கனும் முழுமையாக வேகும் வரை மூடி சமைக்கவும். இறுதியில் சிறிது நெய், புதினா, கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும். Easy one-pot chicken biryani with 1 cup basmati rice and 250 g chicken. Soak the rice and marinate the chicken for 30 minutes each, then cook together with spices until the rice is fluffy and the chicken is fully cooked. செய்து பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க! புதிய தமிழ் சமையல் காணொளிகளுக்குச் சுவைச்சாரல் சேனலை Subscribe பண்ணுங்க. ❤️ #சிக்கன்பிரியாணி #ChickenBiryani #TamilCooking #SuvaiSaaral