Перейти к содержимому

தினமும் 10 நிமிடம் மட்டும் கேளுங்கள் - வாழ்க்கையே மாறும் | நவகிரக போற்றி தொகுப்பு

Deivegamuthukkal

0:00 / 0:00

தினமும் 10 நிமிடம் மட்டும் கேளுங்கள் - வாழ்க்கையே மாறும் | நவகிரக போற்றி தொகுப்பு

628 просмотров · 8 дн. назад
Deivegamuthukkal
445 подписчиков
628 просмотров · 8 дн. назад
தினமும் 10 நிமிடம் மட்டும் கேளுங்கள் - வாழ்க்கையே மாறும் 🙏 இந்த ஒரே வீடியோவில் 9 நவகிரகங்களின் அருளைப் பெறலாம். ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனி போற்றி + கடைசியில் 9 போற்றிகளும் சேர்த்து தொகுப்பாக. ✨ இந்த போற்றியை தினமும் காலை 6 மணிக்கு கேட்டு வாருங்கள், உங்கள் கஷ்டங்கள், தடைகள், தோஷங்கள் விலகி நன்மை பெருகும். நவகிரகங்களுக்குரிய தமிழ் மந்திரங்கள் சூரிய பகவான் சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி சூரியா போற்றி சுதந்திரா போற்றி வீரியா போற்றி வினைகள் களைவாய் சந்திர பகவான் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி திருவருள் போற்றி சந்திரா போற்றி சத்குரு போற்றி சங்கடந் தீரப்பாய் சதுரா போற்றி செவ்வாய் பகவான் சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்களச் செவ்வாய் மலரடி போற்றி அங்காரகனே அவதிகள் நீக்கு புதன் பகவான் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி பதந் தந்தாள்வாய் பண்ணொலியானே உதவியே அருளும் உத்தமா போற்றி குரு பகவான் குணமிகு வியாழக் குரு பகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ப்ரகஸ்பதி வியாழப்பர குருநேசா க்ரஹ தோஷமின்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி சுக்கிர பகவான் சுக்கிர மூர்த்தி சுபசுகம் ஈவாய் வக்கிரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனீஸ்வர பகவான் சங்கடந் தீரப்பாய் சனி பகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சாகா நெறியில் இச்சகம் வாழ இன்னருள் தாதா ராகு பகவான் அரவெனும் ராகு ஐயனே போற்றி கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி ராகுக் கனியோ ரம்மியா போற்றி கேது பகவான் கேதுத்தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றி பாவம் தீரப்பாய் வாதம் வம்பு வழக்குகள் இன்றி கேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி 🙏 இந்த நவகிரக போற்றி உங்களுக்கு பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க, உங்கள் குடும்பத்தினருக்கு SHARE பண்ணுங்க, தினமும் பக்தி வீடியோக்களுக்கு SUBSCRIBE பண்ணி BELL-ஐ அழுத்துங்க. நன்றி!