Перейти к содержимому

இலங்கை வானொலி முஸ்லிம் சேவை " சிறுகதை" வாசிப்பவர் சிரேஷ்ட அறிவிப்பாளர் மஃதிஹஸன் இப்றாஹீம் அவர்கள்.

M.I.USANAR SALEEM NINTAVUR

0:00 / 0:00

இலங்கை வானொலி முஸ்லிம் சேவை " சிறுகதை" வாசிப்பவர் சிரேஷ்ட அறிவிப்பாளர் மஃதிஹஸன் இப்றாஹீம் அவர்கள்.

459 просмотров · 5 лет назад
M.I.USANAR SALEEM NINTAVUR
11,3 тыс. подписчиков
459 просмотров · 5 лет назад
இலங்கை வானொலியின் நமது சிரேஷ்ட அறிவிப்பாளர் மஃதி ஹஸன் இப்றாஹீம்! *********************************************** இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசீய சேவை, மற்றும் முஸ்லிம் சேவை, வர்த்தக சேவை போன்றவற்றில் தனது தரம் நிறைந்த சிறப்பு மிகும் இன்குரலால் ,செவ்வனே தனது பணிகளையாற்றிய ஓர் மக்கள் அபிமானம் வென்ற சிரேஷ்ட அறிவிப்பாளர் ஜனாப் மஃதிஹஸன் இப்றாஹீம் அவர்களென்றால் அது மிகையல்ல. அன்பு அறிவிப்பாளர் மஃதிஹஸன் இப்றாஹீம் அவர்கள் மிகவும் சிறப்புவாய்ந்த மாபெரும் நாடகக் கலைஞருமாவார்கள்.அன்னார் குறிப்பாக வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கக் கூடிய நகைச் சுவை நாடங்களை எழுதுவதில் மகா கெட்டிக்காரர்.நமது இலங்கை வானொலியில் அவர்கள் எழுதிய நாடகங்களில் மெய்மறந்து ரசிக்கும் பல இலட்சோப இலட்சம் வானொலி நேயர்களில் நானுமொருவனாகும். மேலும் மஃதிஹஸன் இப்றாஹீம் அவர்கள் ஓர் தலைசிறந்த, அனைவராலுமே பாராட்டி கௌரவிக்கப்பட்ட; பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கும் உன்னதமான நாடக நடிகருமாகும்.அன்னார் வானொலி நாடகங்களை மட்டுமல்ல பல சிறப்பு வாய்ந்த மேடை நாடகங்களையும் தலைநகரிலும், நாட்டின் பல பாகங்களிலும் மேடையேற்றி வெற்றிவாகை சூடிய ஓர் நாடக மேதையும், சிறப்பாக அவற்றில் நடித்தும் பெயர் பெற்ற ஓர் குணசித்திர நடிகருமாவார்கள். எந்தவோர் வானொலிப் படைப்பாக இருந்தாலும் அன்னாரது படைப்புகளில், அவர்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் நேயர்களுக்கு மனத்திருப்தியுடன் மனதிற்கு உற்சாகமும் நிச்சயம் உண்டாகும்.அந்தளவு நேயர்களைத் தனது பல்வேறுபட்ட உயர் திறமைகளால் கவர்ந்த ஆயிரத்தில் ஒருவரே சிரேஷ்ட அறிவிப்பாளர் ஜனாப் மஃதிஹஸன் இப்றாஹீம் அவர்கள். குறிப்பாகச் சொன்னால் நமது அன்னை வானொலியின் தென்றல், தேசிய சேவை, முஸ்லிம் சேவை, வர்த்தக சேவை இன்னும் பல்வேறு சேவைகளில் ஒலிபரப்பப்படுகின்ற வர்த்தக விளம்பரங்களில் நூற்றுக்குத் தொண்ணூறு விகிதமான விளம்பரங்கள் அன்னாரின் கை வண்ணத்திலும் மன எண்ணத்திலும் வண்ணம் பெற்றவை என்றால் அது மிகையல்ல. ஓர் நிகழ்ச்சியின் முடிவிலே அந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளர், அதன் தயாரிப்பாளர், அறிவிப்பாளர் ஆகியோரது நாமங்கள் அறிவிக்கப்படுகின்றன ஆனால் அந்நிகழ்ச்சிக்கான விளம்பரப் பிரதியை அமைத்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தவரது பெயர் வானொலியில் கூறப்படுவதேயில்லை.நியாயப்படி அவர்களது பெயர்களும் உச்சரிக்கப்படுவதே அக் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டி வாழ்வளிக்கும் சிறந்த செயலுமாகும். இங்கே எனது பதிவில் இடம்பெற்றிருக்கும் " வியர்வை வற்றும் முன்!" என்ற இந்தச் சிறுகதை கடந்த மூன்றரைத் தசாப்தங்களுக்கு முன்னர் அதாவது முப்பத்தேழு வருடங்களுக்கு முன்னர் ( 14.04.1984) இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் இரவு 8.15 மணிக்கு ஒலிபரப்பான சிறு கதைப்பிரதியாகும். கதையை மிகவும் உயிரோட்டமாக வாசித்தமைக்காக அறிவிப்பாளரவர்கள் , அன்றைய நாட்களில் முஸ்லிம்சேவையில் ஞாயிறு இரவில் வாராவாரம் ஒலிக்கும்" நேயர் குரல் " எனும் நேயர்களின் கடிதங்கள் இடம்பெறும் அந்த நிகழ்ச்சியின் வாயிலாக, நேயர்களால் மிகவும் பாராட்டி கௌரவிக்கப்பட்டமையும் இங்கே குறிப்பிடக் கூடியதாகும். அன்றைய இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பணிபாளராகவிருந்த அனைவரதும் பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் பாத்திரமாய் விளங்கிய மர்ஹூம் அல்ஹாஜ் வீ.ஏ.கபூர் அவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால், கிழக்கு மண் வாசனையை நேயர்களின் படைப்புகளின் வாயிலாக வானொலியில் அநேகமாகச் சேர்த்துக்கொண்டு என்போன்றோரையும் வளரவைத்தார்கள்.அன்னாருக்கு வல்ல அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேன்மை மிகும் சுவனத்தை வழங்கப் பிராத்திக்கின்றேன் ஆமீன்! அன்பு அறிவிப்பாளர் ஜனாப் மஃதி ஹஸன் இப்றாஹீம் அவர்கள் மிமிக்கிரி கலைஞர்களின் திறமை வாய்ந்தவராகும்.ஒரு சிறுகதையை ஓர் நாடகம்போன்று தனது தனி த்திறமை மூலம், ஒவ்வொரு பாத்திரங்களுக்கு ஏற்ப தனது குரலை மாற்றி நேயர்கள் ரசிக்கும்படி தருவதில் வல்லவர்.உண்மையிலேயே இவர்கள் நமது நாட்டுக்குக் கிடைத்த ஓர் மாபெரும் கலைப் பொக்கிஷம் என்றால் அதுஉண்மையாகும். சகலகலாவல்லவராகத் திகழும் அன்னார் என்றென்றும் மன மகிழ்வோடு நலமுடன் நீடுவாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் வேண்டுகின்றேன் ஆமீன்! இலங்கை வானொலியின் அன்பு அபிமான நேயர் """""""""""""""""""""""""""""""""""""""""" எம்.ஐ.உஸனார் ஸலீம் நிந்தவூர் -இலங்கை (கி.மா) 05/01/2021 """"""""""""""""""