இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் பெருநாள் ஒலிபரப்பின் விசேட நாடகம்"கல்யாணமாம் கல்யாணம்! "07.06.2025
M.I.USANAR SALEEM NINTAVUR
0:00 / 0:00
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் பெருநாள் ஒலிபரப்பின் விசேட நாடகம்"கல்யாணமாம் கல்யாணம்! "07.06.2025
612 просмотров · 1 год назад
M.I.USANAR SALEEM NINTAVUR
11,3 тыс. подписчиков
612 просмотров · 1 год назад
ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தில்
இலங்கை வானொலி முஸ்லிம்
சேவை வழங்கிய விஷேட நாடகம்!
*********************************
07.06.2025 சனிக்கிழமை நமது இலங்கை வானொலி முஸ்லிம் சேவை வழங்கிய ஹஜ்ஜூப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சியில் இடம் பெற்ற சிறப்பு நாடகம் "கல்யாணமாம் கல்யாணம் !" பிற்பகல்வேளை 2.10க்கு ஒலிபரப்பான இந்நாடகத்தை நாடறிந்த பிரபல்ய எழுத்தாளர் திக்வல்லை ஸூம்ரி அவர்கள் எழுதிய இந்த நாடகம் நகைச்சுவை கலந்த ஒரு குணசித்திர கதையை உள்ளடக்கிய சிறப்பு நாடகமாகும்.
நமது நாடகக் கலைஞர்களான கலா பூசணம் மஹ்திஹசன் இப்ராஹீம் அவர்கள் ,மற்றும் கலா பூசணம் ஞெய்றஹீம் சஹீத் அவர்கள் ,
நமது இலங்கை வானொலியின் சிரேஷ்ட கலைஞர் சகோதரி சில்மியா ஹாதி, இன்னும் சிரேஷ்ட கலைஞர் யாழ் ஜாபீர் பரீட், கலைஞர் முஸ்னி முர்ஸித், இந்நாடகத்தை எழுதிய எழுத்தாளர் திக்வல்லை ஸூம்ரி ஆகியோர் நடித்துள்ளனர். தத்தமது பாத்திரங்களை உணர்ந்து மிகவும் சிறப்பாக நாடகத்தை அனைவரும் ரசிக்கும் வண்ணம் மிகவும் சிறப்பாகவும் சுவாரசியமாகவும் நடித்துள்ளார்கள்.அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்!
இலங்கை வானொலியின் அறிவிப்பாளரும் தயாரிப்பாளருமான சகோதரி பாத்திமா றீஷா ஹுசைன் அவர்கள் நாடகத்தை அருமையாகத் தயாரித்திருக்கிறார்கள். மொத்தத்தில் இந்தப் பெருநாள் தினத்தில் ஒரு சிறப்பான நாடகத்தை செவிமடுத்த மகிழ்ச்சி இந்த நாடகத்தை கேட்ட பின்பு ஏற்படுகிறது.உண்மையில் அனைவருக்கும் பயன் மிக்க நல்ல கருத்துக்களை உள்ளடக்கிய இந்த நாடகத்தைத் தந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாப்பான முஸ்லிம் சேவைக்கு எங்கள் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் !
என்றென்றும் அன்பின் அபிமான நேயர்
*************************************
எம்.ஐ.உஸனார் ஸலீம்
நிந்தவூர் - இலங்கை ( கி.மா)
------------------------
0777161224. - 0754551230.