Перейти к содержимому

திருமுதுகுன்றம்(விருத்தாசலம்) | மத்தாவரை நிறுவிக் கடல் கடைந்து | திருஞானசம்பந்தர் தேவாரம்

Shaivamum Thamizhum

0:00 / 0:00

திருமுதுகுன்றம்(விருத்தாசலம்) | மத்தாவரை நிறுவிக் கடல் கடைந்து | திருஞானசம்பந்தர் தேவாரம்

58 просмотров · 2 дн. назад
Shaivamum Thamizhum
3,48 тыс. подписчиков
58 просмотров · 2 дн. назад
01.012 திருமுதுகுன்றம்(விருத்தாசலம்) | மத்தாவரை நிறுவிக் கடல் கடைந்து | திருஞானசம்பந்தர் தேவாரம் Join To Support.....👇👇👇👇👇    / @shaivamumthamizhum   #ViruthagirishwararTemple | #Virudhachalam | #ShivamumThamizhum திருமுதுகுன்றம் : இந்தத் தலத்தில் உயிர்விடும் எல்ல உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்ற இறைவன் பழமலைநாதர் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்கும் தலம் என்பது கந்தபுராணம் வாயிலாக நாம் அறியும் செய்தியாகும். ஆகையால் இத்தலம் விருத்தகாசி என்றும் வழங்கப்படுகிறது. காசியைக் காட்டிலும் சிறந்தது. இந்தத் திருமுதுகுன்றத்தில் வழிபாடு செய்தால் காசியில் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க அவரும் அருள் செய்தார். பின்னர் தானே ஒரு மலையாகத் தோன்றினார். அதன் பின்னரே பிரம்மா படைத்த மலைகளும் தோன்றின. இந்த மலைகளுக்கெல்லாம் சிவபெருமான் மலையாகத் தோன்றிய மலையே முன்னால் தோன்றியது என்பதால் இது பழமலை என்றும் இத்தலத்து இறைவன் பழமலைநாதர் என்றும் வழங்கப்படுகிறார். இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பழமலைநாதர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பெரிய நாய்கி திருஎருக்கத்தம்புலியூரை வணங்கிப் பதிகம் பாடிப் புறப்பட்ட ஆளுடைய பிள்ளையார் இடையிலுள்ள தலங்கள் பலவற்றையும் வணங்கித் துதித்துத் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தை அடைந்தார். போகின்ற வழியிலேயே முதுகுன்ற நாதருடைய அருட்செயல்களும், ஆட்கொள்ளும் திறனும், இயற்கை வளமும், நதியின் செலவும் மனத்தைக் கவர அவற்றை அமைத்து "மத்தாவரை நிறுவி" என்னும் பதிகத்தைத் தொடங்கி "முத்தாறு வந்தடி சூழ்தரு முதுகுன்றடைவோம்" என அருளிச் செய்கின்றார். மத்தாவரை நிறுவிக் கடல் கடைந்து அவ்விடம் உண்ட தொத்தார்தரு மணி நீண்முடிச் சுடர் வண்ணனது இடமாம் கொத்தார் மலர் குளிர் சந்து அகில் ஒளிர் குங்குமம் கொண்டு முத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே. ..... (01) தழையார் வடவிய வீதனில் தவமே புரி சைவன் இழையார் இடை மடவாளொடும் இனிதா உறைவு இடமாம் மழை வானிடை முழவ எழில் வளைவாள் உகிர் எரி கண் முழை வாளரி குமிறும் உயர் முதுகுன்று அடைவோமே. ..... (02) விளையாததொர் பரிசில் வரும் பசு பாச வேதனை ஒண் தளையாயின தவிர அருள் தலைவனது சார்பாம் களையார்தரு கதிராயிரம் உடையவனோடு முளைமாமதி தவழும் உயர் முதுகுன்று அடைவோமே. ..... (03) சுரர் மாதவர் தொகு கின்னரர் அவரோ தொலைவில்லா நரரானபன் முனிவர் தொழ இருந்தானிட நலமார் அரசார்வர அணி பொற்கலன் அவை கொண்டு பன்னாளும் முரசார்வரு மண மொய்ம்புடை முதுகுன்று அடைவோமே. ..... (04) அறையார் கழல் அந்தன்தனை அயின் மூவிலை அழகார் கறையார் நெடுவேலின்மிசை ஏற்றான் இடம் கருதில் மறையாயின பலசொல்லி ஒண்மலர் சாந்தவை கொண்டு முறையான் மிகும் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே. ..... (05) ஏவார் சிலை எயினன் உருவாகி எழில் விசயற்கு ஓவாத இன்னருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில் சாவாதவர் பிறவாதவர் தவமே மிக உடையார் மூவாதபன் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே. ..... (06) தழல் சேர்தரு திருமேனியர் சசிசேர் சடை முடியர் மழமால் விடைமிக ஏறிய மறையோன் உறை கோயில் விழவோடு ஒலி மிகு மங்கையர் தகும் நாடக சாலை முழவோடு இசை நடமுன் செயும் முதுகுன்று அடைவோமே. ..... (07) செது வாய்மைகள் கருதி வரை எடுத்த திறல் அரக்கன் கது வாய்கள் பத்து அலறீயிடக் கண்டான் உறை கோயில் மது வாய செங்காந்தள் மலர் நிறையக் குறைவில்லா முதுவேய்கண் முத்து உதிரும் பொழில் முதுகுன்று அடைவோமே. ..... (08) இயலாடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய செயலாடிய தீயார் உருவாகி எழு செல்வன் புயலாடு வண்பொழில் சூழ் புனல் படப்பைத் தடத்து அருகே முயல் ஓட வெண் கயல் பாய்தரு முதுகுன்று அடைவோமே. ..... (09) அருகரொடு புத்தர் அவர் அறியா அரன் மலையான் மருகன் வரும் இடபக்கொடி உடையான் இடம் மலரார் கருகு குழல் மடவார் கடி குறிஞ்சி அது பாடி முருகனது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே...... (10) முகில் சேர்தரு முதுகுன்று உடையானை மிகு தொல்சீர்ப் புகலிந்நகர் மறைஞான சம்பந்தன் உரைசெய்த நிகரில்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும் பகரும் அடியவர்கட்கு இடர் பாவம் அடையாவே. ..... (11) பதிகப் பலன் : மேகங்கள் வந்து தங்கும் திருமுதுகுன்றத்தில் விளங்கும் பெருமானைப் பழமையான மிக்க புகழையுடைய புகலி நகரில் தோன்றிய மறைவல்ல ஞானசம்பந்தன் உரைத்த ஒப்பற்ற தமிழ் மாலைகளாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு பகர்ந்து வழிபடும் அடியவர்களைத் துன்பங்களும் அவற்றைத் தரும் பாவங்களும் அடையா. ஆலய முகவரி : அருள்மிகு பழமலைநாதர் திருக்கோவில், விருத்தாசலம், விருத்தாசலம் அஞ்சல், கடலூர் மாவட்டம், PIN - 606 001. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"