என் நேசர் அதோ | En Nesar Atho | Tamil Christian New Song #Crosslove #christian
YLJ MEDIA
0:00 / 0:00
என் நேசர் அதோ | En Nesar Atho | Tamil Christian New Song #Crosslove #christian
371 просмотр · 9 дней назад
YLJ MEDIA
898 подписчиков
371 просмотр · 9 дней назад
🎵 என் நேசர் அதோ | En Naesar Atho
பாடலின் தலைப்பு: என் நேசர் அதோ
வரிகள் & மெட்டு: BLJ CHURCH
📖 பாடலின் கருப்பொருள் (About the Song):
இப்பாடல் கல்வாரிச் சிலுவையில் இயேசு கிறிஸ்து சிந்திய திரு இரத்தத்தையும், மனிதகுல மீட்பிற்காக அவர் செய்த ஒப்பற்ற தியாகத்தையும் எடுத்துரைக்கிறது. நம்மைத் தம் உள்ளங்கைகளில் வரைந்து வைத்து அன்போடு அழைக்கும் இரட்சகரின் நேசத்தையும், சிலுவையின் உபதேசம் நமக்கு தேவ பெலனாக இருக்கிறது என்பதையும் இப்பாடல் நினைவூட்டுகிறது.
🎼 பாடல் வரிகள் (Lyrics):
பல்லவி:
என் நேசர் அதோ கல்வாரியிலே
திரு இரத்தம் சிந்தினாரே
உனக்காகவே பலியானாரே
உன்னையுமே மீட்டிடவே (2)
என் நேசர் அதோ என் நேசர் அதோ
என் நேசர் உன்னை அழைக்கின்றாரே
சரணம் 1:
ஆணிகள் பாய்ந்த கரங்களிலே
உந்தனின் முகத்தை வரைந்துள்ளார்
உந்தனின் பாவத்தை போக்கிடவே
அவர் பார சிலுவை சுமந்தாரே (2)
(என் நேசர் அதோ...)
சரணம் 2:
சிலுவையை பற்றின உபதேசம்
வீணானவனுக்கு பைத்தியமாம்
இரட்சிக்கப்பட்ட நமக்கே தான்
அது தேவ பெலனாய் இருக்கிறது (2)
(என் நேசர் அதோ...)
💡 இப்பாடல் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் லைக் (Like) செய்து, உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து (Share), சேனலை சப்ஸ்கிரைப் (Subscribe) செய்ய மறக்காதீர்கள்!