Перейти к содержимому

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நாடகம் "விதியின் தீர்ப்பு! "22.09.2026

M.I.USANAR SALEEM NINTAVUR

0:00 / 0:00

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நாடகம் "விதியின் தீர்ப்பு! "22.09.2026

16 739 просмотров · 9 дней назад
M.I.USANAR SALEEM NINTAVUR
11,3 тыс. подписчиков
16 739 просмотров · 9 дней назад
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் நாடகம்" விதியின் தீர்ப்பு"! ****************************** 22.09.2026 செவ்வாய் இரவு 8.30க்கு இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் மேற்குறிப்பிட்ட நாடகம் ஒலிபரப்பானது. இந்நாடகத்தை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஜனாப் மபாஹிர் மஸுர் மௌலானா அவர்கள் எழுதியிருக்கின்றார்.இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் பல தசாப்தங்கள் தயாரிப்பாளராகப் பணியாற்றி அளப்பரிய சேவைப் பங்களிப்பை வழங்கி ஓர் சிறந்த தயாரிப்பாளர் எனும் நற்பெயரைப் பெற்றுள்ளார்.பல்வேறு நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்துள்ள மபாஹிர் மஸுர் மௌலானா அவர்கள், பல நாடகங்களையும் தயாரித்து நெறிப்படுத்தி நேயர்களது பேரபிமானம், பெரும் பாராட்டு போன்றவற்றையும் நிறையவே சம்பாதித்துள்ளார். அன்னாரது தயாரிப்பிலும் சிறந்த நெறிப்படுத்தலிலும் என்னால் எழுதப்பட்ட இரண்டு தொலைக்காட்சி நாடகங்கள் "நேத்ரா "தொலைக்காட்சியில் ஒலி ஒளிபரப்பாகியுமுள்ளன.எனது நாடகமொன்றில் நடித்தமைக்காக சகோதரி ஞெய்றஹீம் ஸஹீட் அவர்களுக்கு தொலைக்காட்சியின் தேசிய விருதும் கிடைத்தமை இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.அந்த விருதுக்குக் காரணமாய் அமைந்தது மபாஹிர் மௌலானா அவர்களது திறமைமிகும் நெறிப்படுத்தலெனில் மிகையல்ல. இன்று இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலித்த அன்னாரது எழுத்தில் அமைந்த "விதியின் தீர்ப்பு!"எனும் இந்நாடகம் உண்மையில் மனம் திறந்து அனைவருமே பாராட்டும் வகையில் அமைந்திருந்தது.காரணம் சிறந்த சமூகச் சிந்தனையில் கதையின் கரு அமைந்திருந்தது.அன்னாருக்கு ஒருசபாஷ்! மேலும் நமது கலைஞர்களது சிறந்த நடிப்பு, மற்றும் சகோதரி பாத்திமா ரீஸா அவர்களது தயாரிப்பும் நெறிப்படுத்தலும் மிகவும் அபார திறமையும் உழைப்பும் செறிந்ததாகும்.மொத்தத்தில் அருமையானதோர் நாடகம் "விதியின் தீர்ப்பு!" அனைவருக்குமே நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன்! என்றும் அன்பு அபிமான நேயர் ************************************ எம்.ஐ.உஸனார் ஸலீம் நிந்தவூர் - இலங்கை (கி.மா) 0777161223 - 0754551230. """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""