பின்னானவைகளை மறந்து... | FORGET THE THINGS WHICH ARE BEHIND... | INNERMAN DEVOTIONS
Grace Tabernacle apostolic church
0:00 / 0:00
பின்னானவைகளை மறந்து... | FORGET THE THINGS WHICH ARE BEHIND... | INNERMAN DEVOTIONS
37 просмотров · 5 дн. назад
Grace Tabernacle apostolic church
733 подписчика
37 просмотров · 5 дн. назад
பிலிப்பியர் 3:13-14 - ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த விசுவாசியொருவன், தன் உடன் சகோத ரனொருவனுக்கு விரோதமாக குற்றம் செய்தான். அதைக் குறித்து வேறு சில விசுவாசிகளும், ஊராரும் அறிந்திருந்தார்கள் அதனால், சில மாதங்களாக அந்த சகோதன் கலந்து கொள்ளும் ஒன்றுகூடல்களை தவிர்த்து கொண்டான். மற்றய விசுவா சிகளும், ஊராரும் அந்த விடயத்தை மறந்து போகும்வரைக்கும் அமைதலாக இருந்தான். பல மாதங்கள் கடந்து சென்றதும், குற்றத்தை செய்த அந்த விசுவாசியாவன் எந்த தவறும் நடக்கா தது போல அவன் தன்னை பலர் முன்னிலையில் காண்பித்துக் கொண் டான். அதைக் குறித்து சிலர் அவனை வினாவினபோது, அது பழைய கதை. அதை நான் விட்டுவிட்டேன். பின்னா னவைகளை மறந்து முன்னானவை களை நாடிச் செல்கின்றேன் என்று கூறிக் கொண்டான். கிறிஸ்துவுக்குள் அருமையான சகோதர சகோதரிகளே, பின்னானவைகளை மறந்து போவதென்பது, ஒருவன் தான் செய்த குற்றங்களை குறித்து மனம்வருந்தாமல், மனந்திருமபாமல், அதை பராமுகமாக விட்டுவிடுவதில்லை. அப்படி செய்கின்றவர்கள் உணர்வற்ற கடின இதயமுடையவர்கள். குறிப்பாக இரட்சிப்படைந்த பின்பு, தங்கள் வாழ்விலே மற்றவர்களுக்கு எதிராக நடப்பித்த அநியாயங்களை ஏற்றுக் கொண்டு, மனந்திரும்பி, சம்மந்தப்பட்டவர்களுடன் ஒப்புரவாகிய பின்பு. நான் இனி பின்னானவைகளை மறந்து, அவைகளை மறு ம்படியும் இரைமீட்காமல், அவைகளை விட்டுவிட்டு, முன்னாக இருக்கும் பரம பந்தையப் பொருளை நோக்கி முன்னேற வேண்டும். மேலான வைகளை தேட வேண்டும். இந்தப் பூமியோடு அழிந்து போகும் பொரு ட்களையோ, பதவிகளையோ, அந்தஸ்துக்களையோ அல்ல, உன்னத்தி லிருக்கும் மேன்மையானவைகளை நாடித் தேட வேண்டும். மனம்வரு ந்துதல், மனம்திரும்புதல் இல்லாமல் உண்மையான ஒப்புரவாகுதல் இல்லை. எனவே, ஒரு விசுவாசி தன்னுடைய தவறுகளை உணராமல்? தான் நினைத்தபடி தந்திரமாக வாழ்ந்து, சந்தர்பங்களுக்கு ஏற்றபடி சமாளித்துக் கொள்வேன் என்று கூறுவது மாய்மாலமாக இருக்கும். நீங்களோ அப்படியிராமல் தேவனுக்கு முன்பாக உண்மையுள்ளவ ர்களாக இருங்கள்.
ஜெபம்: இருதயங்களை ஆராய்தறிகின்ற தேவனே, என் பாவங்களை நான் மறைந்து, மாய்மாலமுள்ள வாழ்க்கை வாழாமல், அவைகளை அறிக்கையிட்டு விட்டுவிடும்படியாய் எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 தீமோத்தேயு 1:12
Philippians 3:13-14 - but this one thing I do, forgetting those things which are behind, and reaching forth unto those things which are before,
I press toward the mark for the prize of the high calling of God in Christ Jesus. (KJV)
Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada
Background Music: Recorded by Grace Tabernacle apostolic church
Our Website:
https://gtachurch.ca/daily
https://gtachurch.ca/im
Produced by: Grace Tabernacle apostolic church, Toronto Canada