கதம்ப சுண்டல் புளிக்கூட்டு | புளிப்பும் காரமும் சேர்ந்த அருமையான சுவை
Druti's Kitchen & Vlogs
0:00 / 0:00
கதம்ப சுண்டல் புளிக்கூட்டு | புளிப்பும் காரமும் சேர்ந்த அருமையான சுவை
4 342 просмотра · 6 дней назад
Druti's Kitchen & Vlogs
5,63 тыс. подписчиков
4 342 просмотра · 6 дней назад
கதம்பா சுண்டல் புளிக்கூட்டு | Kadamba Sundal Pulikkoottu 😋
நவராத்திரி ஸ்பெஷலாக, வீட்டில் இருக்கும் பலவகையான சுண்டல்களை வைத்து மிகவும் சுவையான கதம்பா சுண்டல் புளிக்கூட்டு செய்வது எப்படி என்று இந்த வீடியோவில் பார்க்கலாம். புளிப்பு, காரம், அரைத்த மசாலா சேர்ந்து சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். 😍
தேவையான பொருட்கள்:
பட்டாணி
வேர்க்கடலை
கொண்டைக்கடலை
காராமணி
துவரம்பருப்பு
புளி – ஒரு சிறிய எலுமிச்சம்பழ அளவு
துருவிய தேங்காய் – கால் மூடி
கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு
மசாலா வறுத்துப் பொடி செய்ய:
தனியா – 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – தேவையான அளவு
கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
உங்களிடம் இருக்கும் பட்டாணி, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, காராமணி போன்ற சுண்டல் வகைகளை இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
காலையில் ஊறவைத்த சுண்டல் வகைகளை குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். துவரம்பருப்பையும் தனியாக வேகவைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை நன்றாக வறுத்து ஆறவைத்து பொடி செய்துகொள்ளவும்.
புளியை ஒரு சிறிய எலுமிச்சம்பழ அளவு எடுத்து ஊறவைத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் கடுகு தாளித்து, கரைத்து வைத்த புளித்தண்ணீரை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
அதில் வேகவைத்த சுண்டல் வகைகளைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும்.
வறுத்து வைத்த மசாலாப் பொடியுடன் கால் மூடி துருவிய தேங்காயைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
சுண்டல் புளிக்கூட்டு நன்றாகக் கொதித்ததும் அரைத்த மசாலா கலவையைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
கடைசியாக வேகவைத்த துவரம்பருப்பைச் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அருமையான சுவையில் கதம்பா சுண்டல் புளிக்கூட்டு தயார்! 😋❤️
இந்த ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை கமெண்டில் தெரிவியுங்கள். வீடியோ பிடித்திருந்தால் Like 👍, Share, Subscribe செய்ய மறக்காதீர்கள். நன்றி! 🙏
#கதம்பாசுண்டல் #சுண்டல்புளிக்கூட்டு #KadambaSundal #SundalPulikkoottu #NavaratriSpecial #NavaratriRecipes #TamilCooking #TamilRecipes #TraditionalCooking #SundalRecipe #FestivalRecipes #DurtheesKitchen