Перейти к содержимому

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நாடகம் "வீட்டுக்கு வீடு!"25.08.2026

M.I.USANAR SALEEM NINTAVUR

0:00 / 0:00

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நாடகம் "வீட்டுக்கு வீடு!"25.08.2026

3 120 просмотров · 1 месяц назад
M.I.USANAR SALEEM NINTAVUR
11,3 тыс. подписчиков
3 120 просмотров · 1 месяц назад
" நாடகம்" - "வீட்டுக்கு வீடு!" இலங்கை வானொலி முஸ் லிம் சேவையில்! *************************************** இலங்கை வானொலி முஸ்லிம் சேவை வாராவாரமாக (பன்நெடுங்காலமாக) ஒலிபரப்பிவரும் செவ்வாய் இரவு 8.25க்கு ஒலிபரப்பாகும் முஸ்லிம் நாடக வரிசையில், ஓர்சில வாரங்களுக்கு முன்பு என்னால் எழுதி அனுப்பிவைக்கப்பட்ட " வீட்டுக்கு வீடு!" எனும் பெயரிலமைந்த சமூக நாடகம் ஒலிப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 25 .08.2026 செவ்வாயிரவு முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பானது. மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அல்ஹம்துலில்லாஹ்! இந்நாடகத்தின் கதாநாயகனின் பெயர் றபீக்! கதாநாயகனாக எமது இலங்கை வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளரும்,முஸ்லிம் சேவையின் முன்நாள் நாடகத் தயாரிப்பாளரும் கலைஞரும் பிரபல எழுத்தாளரும் கவிஞருமான ஏ.எல்.ஜபீர் அவர்கள் நடித்துள்ளார்கள்.றபீக்கின் தந்தையாக நேயர்களின் நெஞ்சங்களில் என்றுமே நிலைத்துள்ள எமது சிரேஷ்ட அறிவிப்பாளரும் நகைச்சுவை எழுத்தாளரும் கலைஞருமான கலாபூஷணம் மஃதிஹஸன் இப்றாஹீம் அவர்களும் , ரபீக்கின் தாயார் ஸம்ஸாத் பாத்திரத்தில் சௌத்துல் அந்தலீப் இசைக்கோகிலம் பட்டம்வென்ற பிரபல பாடகியும் சிரேஷ்ட நாடகக் கலையரசியுமான சகோதரி நூர்ஜஹான் மர்ஸுக் அவர்களும், கதாநாயகன் ரபீக்கின் மாமாவாக "பாரம்பரியம்" நிகழ்ச்சி நாயகரும் பிரபல சிரேஷ்ட வானொலிக் கலைஞருமான கலாபூஷணம் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஜின்னாஹ் அவர்களும், கதாநாயகனது முறை மச்சியாக மஃமூதா எனும் பாத்திரத்தில் ஆசிரியையும், அறிவிப்பாளரும் வானொலியின் சிரேஷ்ட கலைஞருமான சகோதரி ஸில்மியா ஹாதி அவர்களும், ரபீக்கின் மனையாள் பாத்திரமான ஸப்ரினாவாக சிரேஷ்ட கலைஞர் சகோதரி ஸுல்பிகா அன்வர் மதனி அவர்களும் நடித்துள்ளனர். உண்மையாகச் சொன்னால் எனது நாடகத்தின் நிஜ மனிதர்களை நம்மனக்கண்முன் கொண்டுவந்த பாத்திரங்களாகவே இவர்கள் ஒவ்வொருவரும் ஆகி,தங்கள் ஒப்புவமையற்ற பெரும் நடிப்பால் என்னை அப்படியே மெய்மறக்கச் செய்து விட்டார்கள்.அனைவருக்குமே மொத்தத்தில் சபாஷ் என்றுகூறி மனமாரப் பாராட்டுகின்றேன்.மிக்க நன்றிகள்.ஜஸாக்கல்லாஹ்ஹைர்! மேலும் , நாடகத்தை வெகு சிரமப்பட்டுச் சிறப்பாகத் தயாரித்துப் பெரும் பரிசெனவே நேயர்களுக்கு வழங்கியுள்ளார் எமது இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட முன்னணித் தயாரிப்பாளர்களில் ஒருவரான அறிவிப்பாளர் சகோதரி பாத்திமா றீஸா ஹுசைன் அவர்கள். மொத்தத்தில் நீண்ட நாட்கள் கடந்து நான் எழுதிய இந்நாடகத்தைச் செளிப்பாக்கிச் சிறப்பாக்கி வானலைகளில் வலம்வரச்செய்த சகோதரி றீஸா ஹுசைன் அவர்களுக்கும்,தமது உன்னதமான நடிப்பாற்றலால் மெய்சிலிர்க வைத்த கலைஞர்களுக்கும்,பாசம்மிகு பணிப்பாளர் சகோதரி பாத்திமா ரினூஸியா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நேச நன்றிகளையும் அன்பான நல்வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பேருவகை கொள்கிறேன்...வாழ்க நீடு.. வாழ்க வளமுடன் ஆமீன்! என்றும் அன்பு அபிமான நேயர் ************************************ எம்.ஐ.உஸனார் ஸலீம் நிந்தவூர் - இலங்கை ( கி.மா) 0777161223 - 0754551230. """""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""