இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நாடகம் "அவன் வருவான்! "13.10.2026
M.I.USANAR SALEEM NINTAVUR
0:00 / 0:00
இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நாடகம் "அவன் வருவான்! "13.10.2026
10 919 просмотров · 1 дн. назад
M.I.USANAR SALEEM NINTAVUR
11,5 тыс. подписчиков
10 919 просмотров · 1 дн. назад
இங்கை வானொலி முஸ்லிம் சேவை
வழங்கிய "அவன் வருவான்!" நாடகம்!!
************************************
13.10.2026 செவ்வாய் இரவு 8.25க்கு ஒலிபரப்பாகியது.அந்நாடகத்தின் ஒலிப்பதிவேயிது.
இலங்கை வானொலியின் சிரேஷ்ட கலைஞர்கள் இந்நாடகத்தில் பங்கேற்று நடித்துள்ளனர்.இலங்கை வானொலியின் சிரெஷ்ட அறிவிப்பாளரும் முன்நாள் இலங்கை வானொலி முஸ்லிம்சேவை நாடகத் தயாரிப்பாளருமான ஏ.எல்.ஜபீர் அவர்கள், இலங்கை வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளரும் நகைச்சுவை நாடக எழுத்தாளரும் முஸ்லிம்சேவைக் கலைஞருமான கலாபூஷணம் மஃதிஹஸன் இப்றாஹீம் அவர்கள் , சௌத்துல் அந்தலீப் இசைக்கோகிலம்,கலாபூஷணம் சகோதரி நூர்ஜஹான் மர்ஸூக் அவர்கள், மற்றும் இலங்கைவானொலி முஸ்லீம்சேவை பாரம்பரியம் நாயகர் கலாபூஷணம் எம்.எஸ்.எம்.ஜின்னாஹ் அவர்கள், இலங்கைவானொலி முஸ்லிம்சேவை அறிவிப்பாளரும் நாடகத் தயாரிப்பாளருமான சகோதரி பாத்திமா ரீஸா ஹுசைன் அவர்கள், மற்றும் இலங்கை வானொலி முஸ்லிம்சேவை அறிவிப்பாளரும் தயாரிப்பாளருமான ஸீ.எம்.எம்.ஸுபைர் அவர்கள், மேலும் சகோதரி ஸஸ்னாபானு நவாஸ் , இனும் சகோதரர் மொஹம்மட் ஸரீர் ஆகியோர் பங்கேற்று மிகவும் அற்புதமாய் நடித்துள்ளனர்.
மேலும் நாடகத் தயாரிப்பார் சகோதரி பாத்திமா ரீஸா ஹுசைன் அவர்களின் தயாரிப்பு நெறியாழ்கையும் மிகமிகச் சிறப்பு.மொத்தத்தில் கலைஞர்கள் ,தயாரிப்பாளர் உட்பட அனைவருக்குமே எனது நெஞ்சார்ந்த நன்றிகளுடன் கனிவான நல் வாழ்த்துகளும்.
குறிப்பாக இந்நாடகத்தில் மிக முக்கியமான (தாய்) பாத்திரத்தில் நடித்துள்ள பாசச்சகோதரி நூர்ஜஹான் மர்ஸூக் அவர்கள் கடந்த 16.09.2026 அன்று காலமான கவலையான சேதி அனேகர் அறிந்திருப்பீர்கள்.( இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜிஊன்).
அவர்கள் மௌத்தாகிச் சுமார் ஒரு மாதத்தின் பின்னரே இந்நாடகம் இன்று வானொலியில் முதல் தடவையாக ஒலித்ததென்பது இங்கு குறிப்பிடத் தக்கது.இது அவர்கள் பங்கேற்று நடித்த அவர்களது கடைசி நாடகமென்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர்கள் மிகமிகச் சிறப்பாக , அனைவரையுமே கண்ணீர் சிந்தவைக்கும் அளவிற்குத் தனது திறமைகளையெல்லாம் ஒன்றுசேர நடித்த இந்நாடகத்தை அவர்களால் வானொலியில் கேட்டுமகிழ முடியவில்லை என்பது மிகவும் கவலையான விடையம்.இதைத்தான் இறைவனின் நாட்டம் அவனின் விதியென்பது.யாஅல்லாஹ்!
நம்மைவிட்டும் பிரிந்துவிட்ட அந்த அன்புச்சகோதரியவர்கள் தனது வாழ்நாளில் தெரிந்தும் தெரியாமலும் செய்த அனைத்துப் பாவங்களையும் தவறுகளையும் கருணைமிகும் அல்லாஹுத்தஆலா தயைகூர்ந்தே மன்னித்து , அவர்களுக்குத் தனது ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை அவர்களது மண்ணறை,மறுமை இரண்டிலுமே வழங்கியே நல்லருள் புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாறப்பிலாலமீன்!
அன்பின் அபிமானநேயர் என்றும்
""""""""''''"""""""""""""""""""""""""""""""""""""
எம்.ஐ.உஸனார் ஸலீம்
நிந்தவூர் - இலங்கை ( கி.மா)
0777161224 - 0754551230.
"""""""""""""""""""""""""""""""""""""""""